தேவைக்கதிகமாக 2 லட்சம் ஹெக்டரில் ‘ஓபியம்’ உற்பத்தி: ஆப்கன் விவசாயிகள் குறித்து ஐ.நா. கவலை
காபூல்: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 35 சதவீதம் அதிகமாக ஓபியம் விவசாயத்தில் ஆப்கானிஸ்தான் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
1990களில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட தொடர் யுத்தங்களின் விளைவாக, ஆப்கன் அரசுக்கு உதவி புரியும் விதமாக கடந்த 2001ஆம் ஆண்டு அந்நாட்டில் ஐ.நா.வின் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்பட்டன.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அந்நாட்டில் ஓபியம் உற்பத்தியை ஒழிக்க மேற்கத்திய நாடுகள் செய்த முயற்சிகளின் விளைவாக அங்கிருந்த இரண்டு மாகாணங்களில் இந்தப் பயிர்களின் உற்பத்தி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, அங்கு தேவையை விட அதிக அளவில் போதைப் பொருள் விவசாயம் செய்யப் பட்டிருப்பதாக ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் குழப்பம்...
வரும் 2014ஆம் ஆண்டின் இறுதியில் நேட்டோ படைகள் ஆப்கனிலிருந்து முற்றிலுமாக விலகிக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதனால், ஏற்கனவே தலிபான்களின் தாக்குதல்களால் ஆடிப் போயிருக்கும் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதாரமும் மேலும் சிக்கலாகலாம் எனச் சொல்லப் படுகிறது.

ஓபியம் பயிர்....
எனவே, அங்குள்ள விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த வருடம் அதிக அளவில் போதைமருந்து பயிர்ப் பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர் என்று ஐ.நாவின் வருடாந்திர அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

தேவைக்கு அதிகமாக...
கிட்டத்தட்ட 2,00,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள இந்த மூலப்பொருள் முற்றிலுமாக அறுவடை செய்யப்பட்டால் உலகத் தேவைகளை விடவும் அதிகமாக இருக்கக்கூடுமாம்.

ஐ.நா கவலை....
இந்த உற்பத்தி சென்ற வருடத்தைவிட 36 சதவிகிதம் அதிகப்படியானது என கவலைத் தெரிவித்துள்ளது ஐ.நாவின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் மீதான அலுவலகத்தின் ஆய்வறிக்கை.

பாதுகாப்பின்மை...
இது குறித்து ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களாவது, ‘தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டில் காணப்படும் பாதுகாப்பின்மையே விவசாயிகளின் இந்த முடிவுக்குக் காரணமாகும்' என்றனர்.

தாலிபன் பகுதி...
போதைப் பொருள் விவசாயத்தில் பாதிக்கும் மேற்பட்ட சாகுபடி ஆப்கனின் தென்பகுதியான தாலிபன்களின் ஆதிக்கம் மிகுந்த ஹெல்மான்ட் பகுதியிலேயே காணப்படுவதாக ஆப்கன் நாட்டின் போதைத்தடுப்பு அமைச்சரான தின் முகமது முபாரக் ரஷிதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications