Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுக்கடங்காத தீவிரவாதம்! முதலில் இதை சரி செய்யுங்க.. பாகிஸ்தானுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் சென்றுக்கொண்டிருப்பதாகவும், உடனடியாக இதை அந்நாட்டு அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று ஐநா அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும், இது பற்றி உண்மையான அக்கறை கொண்டு பாகிஸ்தான் செயல்பட வேண்டும் எனவும் ஐநா கூறியிருக்கிறது.

UN Balochistan Pakistan

பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாகும். இது புவியியல் ரீதியாக ஈரானுடனும், ஆப்கானிஸ்தானுடனும் எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது. இந்த மாநிலத்தின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை என்று, உள்ளூர் மக்கள் மத்தியில் பாகிஸ்தான் அரசு குறித்து அதிருப்தி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டு தீவிரவாத குழுக்கள் இங்கு பரவலாக இயங்கி வருகின்றன. இதையெல்லாம் கண்காணித்து, பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அந்நாட்டு அரசின் பொறுப்பு.

ஆனால், காவல்துறையும், அம்மாநிலத்தில் உள்ள சட்டங்களும் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியாக இயங்காமல் இருக்கின்றன. எனவே இந்த பகுதியில் மனித உரிமை மீறல்கள் அதிக அளவு நடக்கின்றன. கடந்த 2023-2024ம் ஆண்டு நடந்த பிரச்சனைகளை பட்டியலிட்டால், விஷயத்தின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரிய வரும்.

இந்த ஓராண்டில் மட்டும் இப்பகுதியில் 150க்கும் அதிகமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பாக். ராணுவ முகாம்கள், பொது போக்குவரத்து மற்றும் சீனாவின் 'சிபிசிஇ' திட்ட பணிகள் நடைபெறும் இடங்கள் மீதும் 60க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

பழங்குடியினர் இடையே மோதல், கடத்தல் சம்பவம், கௌரவ கொலைகள் என 300க்கும் அதிகமான கொலைகள் நடந்திருக்கின்றன. 100க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். தவிர அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன. பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கட்டாய திருமணங்கள் பற்றியும் ஏராளமான புகார்கள் பதிவாகியிருக்கிறது.

மறுபுறம் பாக். ராணுவம் கட்டாய கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இப்படி கைது செய்யப்படுபவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு தொடர்பாக 10,000க்கும் அதிகமான வழக்குகள் கடந்த ஓராண்டில் பதிவாகியிருக்கிறது. 5000க்கும் அதிகமாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

சில முக்கியமான சம்பவங்களை சொல்ல வேண்டும் எனில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவெட்டாவில் பள்ளிக்கூடத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகியிருந்தனர். 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பலுசி விடுதலை இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் சீனாவின் சிபிஇசி திட்டத்தின் பணியாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு மார்ச் மாதம் மகளிர் உரிமை ஆர்வலர் கரீமா பலுச் காணாமல் போனார். பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

நவம்பர் மாதம் 9ம் தேதி குவெட்டா ரயில்நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் சம்பவத்திற்கும் இவர்களே பொறுப்பேற்றார்கள்.

இவ்வளவு பிரச்சனைகளை சுட்டிக்காட்டிதான் ஐநா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. எந்த ஒரு நாடும் தீவிரவாதத்துடன் போராடுவதற்கு முன்னர், பிரச்சனையின் மூல காரணத்தை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ஐநா, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க விசாரணை மற்றும் தேடல் குழுக்களை அமைக்க வேண்டும். காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். இதில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

முன்கூட்டியே கைது செய்வதை தவிர்க்க வேண்டும். வன்முறை வதை முகாம்களை அகற்ற வேண்டும். மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக ராணுவம் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கைவிடப்பட வேண்டும் என்று ஐநா கூறியிருக்கிறது.

இவ்வளவு பிரச்சனையை வைத்துக்கொண்டு, இந்தியாவுடன் மோதலை மேற்கொள்வதெல்லாம் ஆகப்பெரிய நகைச்சுவை என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+