பழைய சிம் கார்டில் தங்கம் எடுத்து ₹27 லட்சம் சம்பாதித்த சீன நபர்: உலகை வியக்க வைக்கும் டெக்னாலஜி!
பெய்ஜிங்: தங்க விலை உயர்வு உலக மக்களை கவலை அடைய செய்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு நபர் பழைய சிம் கார்டு மற்றும் மின்னணு கழிவு மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது... கடந்த 2 நாட்களாகவே இதுதான் எங்கும் பேச்சாக உள்ளது.. அப்படியென்ன செய்துவிட்டார் இந்த கியாவோ???
குவாங்டாங் பகுதியை சேர்ந்தவர்தான் கியாவோ.. இவர் சுமார் 2 டன் எடையுள்ள பழைய சிம் கார்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் சிப் கழிவுகளை சேகரித்து அதிலிருந்து 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்திருக்கிறார்...

அதன் மதிப்பு நம்முடைய ரூபாய் கணக்கில் சுமார் 27 லட்சம் ஆகும். அவர் இந்த செயல்முறையை வீடியோவாக பதிவிட்ட நிலையில், அது சோஷியல் மீடியாவில் பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
பழைய சிம் கார்டுகள்
பொதுவாக சிம் கார்டுகள், கணினி சிப்கள் துரு பிடிக்காமல் இருப்பதற்காகவும், தகவல்கள் வேகமாக செல்லவும் அதன் மேல் மிக மெல்லிய அளவில் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும்... அந்த தங்க முலாம்களைதான் கியாவோ, தேய்த்து வாரி சுருட்டி உள்ளார்..
சிம் கார்ட்டிலுள்ள எல்லா ரசாயனம் கலந்த பெரிய டப்பாவில் போட்டு, பல கட்ட சுத்திகரிப்பு முறைகளை கையாண்டிருக்கிறார்.. இது லேசுப்பட்ட வேலை கிடையாது.. ஆசிட்களை பயன்படுத்துவது, அதிக வெப்பத்தில் சூடுபடுத்துவது போன்ற ஆபத்தான வேலைகளும் இதில் அடங்கி உள்ளன.
தங்கம் - ரகசியம்
ஏகப்பட்ட ரிஸ்க் வேலைகளை பார்த்து, கடைசியில் அவருக்கு கிடைத்த அந்த தங்கம் கிடைத்துள்ளது.. இதுதான் உலகையே வியக்க வைத்து உள்ளது. ஒரு சிம் கார்டில் மிக சிறிய அளவே தங்கம் இருக்கும் என்பதால் அவர் டன் கணக்கில் கழிவுகளை பயன்படுத்தி இந்த சாதனையை செய்திருக்கிறார்..
இந்த செய்தி பரவியதுமே சீனாவில் பழைய சிம் கார்டுகளை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. அதுமட்டுமல்லாமல், சில விற்பனையாளர்கள் தங்க சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் பயிற்சி வழிகாட்டி பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்களாம்..
சீன நபரின் தங்க மேஜிக்
இதை பார்த்ததுமே கியாவோ ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.. "இந்த வேலையை சாதாரண மக்கள் வீட்டில் முயற்சி செய்ய கூடாது.. காரணம், இதில் பயன்படுத்தும் ரசாயனங்கள் உடலுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்...
முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இதை செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்... நான் ஒரு உரிமம் பெற்ற நிபுணர் என்பதால் மட்டுமே இதை சட்டப்பூர்வமாக செய்திருந்தேன்" என்று கியானோ விளக்கம் தந்து மக்களை அலர்ட் செய்துள்ளார் கியாவோ..
தங்கம் விலை - அலர்ட்
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அரசு அனுமதி இல்லாமல் மின்னணு கழிவுகளை கையாளுவது சட்டப்படி குற்றமாகும்... மின்னணு கழிவுகளில் செல்வம் ஒளிந்து இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் அதனை முறையாக மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
பேராசையில் ஆபத்தான ஆசிட்களை கொண்டு தங்கம் எடுக்க முயற்சிப்பது பணத்தையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் பாதிக்க செய்துவிடும்.. எனினும் இந்த சம்பவம் மின்னணு கழிவு மேலாண்மை பற்றிய புதிய விவாதத்தை உலக அரங்கில் கிளப்பி விட்டுள்ளது..!












Click it and Unblock the Notifications