மலேசிய விமானத்தினை தேடும் பணி 2016ல் நிறுத்தம் – ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சிட்னி: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி 2016 இல் நிறுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது

காணாமல் போன எம்.ஹெச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா தலைமையிலான கூட்டு ஏஜென்சி மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன இவ்விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியாவும், மலேசியாவும் ஈடுபட்டு வரும் போதிலும், விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

Underwater search for MH370 could end next year, Australia says

தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ பரப்பளவில் தேடும் பணி நடைபெற்ற வரும் நிலையில் இனி வரும் காலங்களில் தேடும் பரப்பை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டு ஏஜென்சி மையங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய தரப்பில் 80 மில்லியன் டாலர்களும், மலேசிய தரப்பில் 45 மில்லியன் டாலர்களும் செலவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காத பட்சத்தில் விமானத்தை தேடும் பணி 2016 ஆம் ஆண்டு நிறுத்தப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இவ்விமானம் மாயமான போது அதில் 239 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+