சவுதி அரேபியா: ஜெட்டா ஹஜ், உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் பங்கேற்பு!
ஜெட்டா: சவுதி அரேபியா அரசு நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் வி. முரளீதரன் ஆகியோர் ஜெட்டாவில் சவுதி அரேபிய அரசு ஏற்பாடு செய்துள்ள ஹஜ் மற்றும் உம்ரா, மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொண்டனர். சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இரு அமைச்சர்களின் தலைமையில் தூதுக்குழு அதில் கலந்துகொண்டுள்ளது. ஜனவரி 7-ம் தேதியன்று இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே ஹஜ் 2024-க்கான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சி என்பது ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும், மேலும் இந்த சர்வதேச மாநாட்டின் 3-வதுபதிப்பு மற்றும் கண்காட்சி 2024 ஜனவரி 08 முதல் 11 வரை ஜெட்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய மாநாட்டில் முக்கிய முடிவு எடுப்பவர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அமர்வுகள், பட்டறைகள், பயிற்சிக் கருத்தரங்குகள் ஆகியவை இடம்பெறும். ஹஜ் மற்றும் உம்ரா துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் பொது நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டனர். இது உலக அளவில் சிறந்த நடைமுறைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. மேலும் இந்திய யாத்ரீகர்களுக்கு ஹஜ் அனுபவத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் யோசனைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவியது.
𝐏𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞𝐝 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐢𝐧𝐚𝐮𝐠𝐮𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐜𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝟑𝐫𝐝 𝐇𝐚𝐣 𝐚𝐧𝐝 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐉𝐞𝐝𝐝𝐚𝐡.
— Smriti Z Irani (@smritiirani) January 9, 2024
Grateful for the gracious invitation extended by the Saudi Ministry of Hajj and Umrah Affairs @HajMinistry,… pic.twitter.com/tBUto6YuQz
இந்த மாநாட்டுக்கு இடையே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி, இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் மக்கா பிராந்திய துணை ஆளுநர் இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் பின் பவ்ஸான் அல் ரபியா கலந்து கொண்டார். ஹஜ் 2024-ன் போது இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த முயற்சிக்கும் சவுதி அரேபியாவுடன் மேலும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications