பச்சை நிற டீசர்ட் + டிராக் பேண்ட்.. பாகிஸ்தானில் ஜாலியாக வாக்கிங் போன ஜெய்சங்கர்.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: 9 ஆண்டுகள் கழித்து நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்ற நிலையில் பச்சை நிற டீசர்ட் - டிராக் பேண்ட் அணிந்து ஜாலியாக வாக்கிங் செய்தார்.
இந்தியா உள்பட 9 நாடுகள் எஸ்சிஓ எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் 10 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. அதன்படி பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பு என்பது நாட்டிலேயே பிராந்திய அமைப்பு வகையில் மிகவும் பெரிய அமைப்பாக உள்ளது. அதாவது உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 42 சதவீத மக்கள் இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வசிக்கின்றனர். இந்த கூட்டமைப்பு என்பது யுரேசியன் அரசியல் (ஐரோப்பியா மற்றும் ஆசியா சார்ந்த அரசியல்), பொருளாதாரம், சர்வதேச பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகள் பற்றி ஆலோசிக்கும் அமைப்பாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எஸ்இஓ அமைப்புக்கு ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்கும். அந்த வகையில் 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான எஸ்சிஓ உச்சிமாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாடு நேற்று தொடங்கி இன்று 2வது நாளாக நடந்து வருகிறது.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானதளத்தில் இறங்கினார். இதற்கு முன்பு கடந்த 2015 இந்தியா சார்பில் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றார். அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து ஜெய்சங்கர் இப்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். ஜெய்சங்கருக்கு அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இலியாஸ் மெகமூத் நிஜாமி வரவேற்றார். அதேபோல் நேற்று நடந்த டின்னர் விருந்தில் பங்கேற்க சென்ற ஜெய்சங்கருக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைக்குலுக்கி வரவேற்றார்.
இதையடுத்து இன்று நடந்து வரும் 2வது நாள் எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். முன்னதாக இன்று காலையில் கண்விழித்த ஜெய்சங்கர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரிகளுடன் காலை நேரத்தில் ஜாலியாக வாக்கிங் சென்றார். அப்போது அவர் பச்சை நிற டீசர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார். மேலும் அவர் பாகிஸ்தான் சென்றதன் நினைவாக அங்குள்ள இந்திய தூதரகத்தில் ஜெய்சங்கர் செடி ஒன்றை நடவு செய்தார்.

இதுதொடர்பான போட்டோவை ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தானில் உள்ள நம் நாட்டின் தூதரகத்தின் வளாகத்தில் உடன் பணியாற்றுவோருடன் காலை நேர வாக்கிங் சென்றேன்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் செடி நடவு செய்த போட்டோவையும் வெளியிட்டுள்ள அவர், ‛‛பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அர்ஜூனா செடியை நடவு செய்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications