அமீரக விமான நிலையங்களை கடக்க கத்தார் மக்களுக்கு அனுமதி மறுப்பு.. பதற்றத்தில் வளைகுடா நாடுகள்!
அமீரக விமான நிலையங்களை கடந்து செல்லவும் கத்தார் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அபுதாபி: அமீரக விமான நிலையங்களை கடந்து செல்லவும் கத்தார் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் உள்ள கத்தார் மக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் திங்களன்று துண்டித்துக் கொண்டன. கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள், கத்தாருடனான எல்லையையும் மூடி விட்டன.
கத்தார் உடனான வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை பஹ்ரைன் நிறுத்திவிட்டது. அமீரக விமான நிறுவனங்களும் கத்தாருக்கு அளித்த சேவையை நிறுத்திவிட்டது.

விமான சேவைகள் நிறுத்தம்
இதேபோல் சவுதிஅரேபியாவும் கத்தாருடனா உறவு மற்றும் போக்குவரத்தை துண்டித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் விமான நிறுவனங்களும் சவுதி அரேபியாவுக்கு அளித்து வந்த சேவையை நிறுத்தியுள்ளது.

கத்தாருக்கான சாலைகள் மூடல்
இதனிடையே வளைகுடா நாடுகள் கத்தாருடனான அனைத்து இணைப்புச் சாலைகளையும் மூடியுள்ளன. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள கத்தார் நாட்டு மக்கள் 2 வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மறுப்பு தெரிவித்த கத்தார்
ஆனால் கத்தார், தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிற குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுகுறித்து திறந்த மனதுடனும் நேர்மையுடனும் பேச்சுவார்த்தை நடத்தவர வேண்டும் என கத்தார் அரசு தெரிவத்துள்ளது.

விமான நிலையங்களை கடக்க தடை
இந்நிலையில் கத்தார் மக்கள் தங்களின் விமானங்களை மாற்றிக்கொள்வதற்காக கூட அமீரக விமான நிலையங்களை கடக்க கூடாது என அமீரக அரசு தெரிவித்துள்ளது. கத்தாருடனான தொடர்பை துண்டித்த அரபு நாடுகளின் விமான நிலையங்களை கத்தார் மக்கள் கடந்து செல்ல ஐக்கிய அரபு அமீரக நாடுகள் தடை விதித்துள்ளன.

மாற்று விமானங்கள் மூலம்
ஏற்கனவே கத்தார் மக்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என அமீரக நாடுகள் உத்தவிட்டுள்ளன. இந்நிலையில் தங்களின் விமான நிலையங்களை கூட மாற்று விமானங்கள் மூலம் கடந்து செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

குவாண்டாஸ் விமானங்களிலும்
மெக்ஸிகோவின் குவாண்டாஸ் விமானங்களிலும் கத்தார் பயணிகள் துபாய் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. குவாண்டாஸ் விமானங்களில் ஐக்கிய அரபு அமீரகமும் பங்குதாரர் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications