அமெரிக்க விமானப்படை அதிரடித் தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் பலி - அல் பக்தாதியும் பலியா?
பாக்தாத்: ஈராக்கின் வட மேற்குப் பகுதியில் அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் நடத்திய அதிரடி குண்டு வீச்சுத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வட மேற்கில் உள்ள குவாயிம் என்ற நகரில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் கூடி ஒரு கூட்டம் நடத்தியபோது அந்த இடத்தைக் குறி வைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் சிக்கி பல முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

அன்பர் என்ற மாகாணத்தில் இந்த குவாயிம் நகர் உள்ளது. சிரிய நகரான புகாமலுக்கு அருகே உள்ளது. இது பாலைவனப் பகுதியாகும்.
இந்தத் தாக்குதலில் பல முக்கியத் தலைவர்கள் பலியாகி விட்டதாக நம்புகிறோம். யாரெல்லாம் கொல்லப்பட்டனர் என்ற தகவலுக்காக காத்திருப்பதாக ஈராக் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்தத் தாக்குதலில், இஸ்லாமியக் குடியரசின் இரண்டு பிராந்திய கவர்னர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த கூட்டம் நடந்தபோது அங்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரும்,அவர்கள் நிறுவிய இஸ்லாமியக் குடியரசின் அதிபருமான அபு பக்கீர் அல் பக்தாதியும் இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. எனவே அவர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் அல் பக்தாதி அஙற்கு இருந்தாரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்று ஈராக் தரப்பு கூறுகிறது.
இருப்பினும் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியிருக்கலாம் என்று ஈராக் அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.
ஒருவேளை அல் பக்தாதி அங்கு இருந்து அவர் கொல்லப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய வெற்றியாக அமையும் என்று ஈராக் நம்புகிறது. நம்பிக்கையுடனும் உள்ளது. அல் பக்தாதி கொல்லப்பட்டால் அது நிச்சயம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பெரும் அடியாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கிடையே, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்த ஆய்வாளரான ஈராக்கைச் சேர்ந்த ஹிஷம் அல் ஹஷிமி கூறுகையில், தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில், இஸ்லாமியக் குடியரசின் அன்பர் மாகாண தலைரான அபு முஹன்னத் அல் ஸ்வதேவி, சிரியாவின் டெய்ர் அல் ஸோர் மாகாண தலைவரான அபு ஸஹரா அல் மஹமதி ஆகியோர் அங்கு இருந்தனர் என்பது உண்மைதான். இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக எனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐஎஸ்ஐஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications