ஈரானிடம் இருக்கும் செக் பாயிண்ட்.. ஹார்மூஸ் மூடும் டிரம்பின் முடிவுக்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு?
வாஷிங்டன்: ஹார்மூஸ் ஜலந்தியை மூடினால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை வைத்து செங்கடலில் உள்ள அல் பாப் மண்டேப் ஜலசந்தியை மூடும் அபாயம் இருப்பதால், அதிபர் டிரம்பின் இந்த முற்றுகை நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தனது கவலையை அமெரிக்காவிடம் பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக டிரம்ப் அறிவித்தார்.
ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுவோம் என்றும் அந்த வழியாக எந்த கப்பல்களும் வரவோ, போகவோ அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா கவலை
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனாவும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் துறைமுகங்கள் அனைத்தையும் அமெரிக்க போர் கப்பல்கள் முற்றுகையிட தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தனது கவலையை தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும். இதற்கு பதிலாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்களை மூட அமெரிக்கா முயன்றால், ஈரான் பிற முக்கியமான கப்பல் ரூட்களையும் குறிவைத்து இடையூறு செய்யும் என்று தனது அச்சத்தை சவுதி அரேபியா டிரம்பிடம் கூறியுள்ளதாம்..
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி
அதாவது, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், அமெரிக்கா ஈரான் ஏற்றுமதியை முடக்க முயற்சித்தால், அந்த நாடு பாப் அல் மண்டேட் ஜலசந்தியை முடக்கி பதிலடி கொடுக்கும். செங்கடலில் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த பாப் அல் மண்டேட் ஜலசந்தி வழியாகவே சவுதி அரேபியா தனது மீதமுள்ள ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தங்களுக்கு கவலையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போரால் ஹார்முஸ் ஜலந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முன் அனுமதி பெற்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்போம் என்று ஈரான் கூறியது. அதேபோல, அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
செங்கடல் வழித்தடமும் பாதிக்கப்பட்டால்
ஈரானின் இந்த நடவடிக்கையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் தொடரும் பதற்றத்தால், அந்த நாட்டின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய தொடங்கிய சவுதி அரேபியா மீண்டும் தனது ஏற்றுமதியை அதிகரித்து வரும் நிலையில், செங்கடல் வழித்தடமும் பாதிக்கப்பட்டால் தனது ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு அடையும் என்று சவுதி அரேபியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பாப் அல் மண்டேப் ஜலசந்தி ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானுக்கு நெருக்கமான அமைப்பாக இந்த ஹவுதி கிளர்ச்சி குழு உள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - காசா போரின் போது இந்த வழித்தடத்தில் போக்குவரத்திற்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு கடும் இடையூறு ஏற்படுத்தியது. தற்போது ஈரானின் அழுத்தம் காரணமாக மீண்டும் இந்த வழித்தடத்தை மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications