சவுதி அரேபியாவில் முக்கிய ஆலோசனை நடத்திய அமெரிக்கா-உக்ரைன் அதிகாரிகள்.. என்ன செய்ய போகிறார் புதின்?
ரியாத்: அமெரிக்கா - உக்ரைன் அதிகாரிகள் சவுதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை தற்காலிமாக நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் சவுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு நேரில் அழைத்து பேசினார். அப்போது சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் இந்த முரண் தணிந்தது.

போரை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா அளித்த முன்மொழிவை ஏற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். எனினும், இந்த விவகாரத்தில் சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக ரஷ்யாவும் கூறியது. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததால், ஒப்பந்தத்தை அமலாக்குவதில் தாமதம் நிலவுகிறது. ஒருபக்கம் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம், ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் மூன்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டும் இன்றி பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைனும் இதற்கு பதிலடியாக டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் அதிகரிகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது எரிசக்தி அமைப்புகள், மற்றும் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ரஸ்டெம் உமேரோவ் தலைமையில் உக்ரைனிய அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தனியாக இன்று பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு இருக்கும் நிலையில், மேற்கூறிய ஆலோசனை நடைபெற்று இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைனில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பதோடு ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் அமலாக வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். இந்த நிபந்தனைகளை எல்லாம் புதின் ஏற்றுக்கொள்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான நீடித்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்கும் நிலையில், இந்த உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம் டிரம்ப் விரும்பிய படி அமலாகுமா? என்பது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications