140 டாலர் கேட்டா.. 37 ஆயிரம் டாலரை கொட்டிய யு.எஸ். ஏ.டி.எம்.!!
நியூயார்க்: அமெரிக்காவில் ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 140 டாலரை கேட்ட நபருக்கு 37 ஆயிரம் டாலரை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு போட்லாண்ட் மெயின் என்ற இடத்தில் டிடி வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க ஒரு பெண் சென்றுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.

இதனால் கடுப்பாகிப் போன அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம்க்குள் சென்று பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர்.
உள்ளே இருந்த நபர் தமது பைகளில் 37 ஆயிரம் டாலரை திணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 140 டாலர்தான் நான் கேட்டேன்..ஆனால் இந்த ஏ.டி.எம் மிஷின் தான் எனக்கு 37 ஆயிரம் டாலரை கொட்டிக் கொடுத்தது என்று கூலாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு டிடி வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏ.டி.எம்.இயந்திரத்தில் கோளாறு இருந்ததாலேயே இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுத்தது என்று பின்னர் தெரியவந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications