காசா போர் நிறுத்தம்! வீட்டோவை பயன்படுத்திய அமெரிக்கா.. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ரத்து
வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே உடனடியாக நிபந்தனையின்றி நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறது.
பிணைக் கைதிகளை விடுவிப்பதை பற்றி இந்த தீர்மானம் எதையும் பேசவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, தீர்மானம் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லி ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா தீர்மானத்தை ரத்து செய்திருந்தாலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
போர் காரணமாக காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் பஞ்சத்தாலும், கடும் பனியிலும் உயிருக்கு போராடி வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனுப்பி வைத்த மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் தூதர் டொரோதி ஷியா கூறுகையில், “இந்த தீர்மானம் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுகிறது. நாங்கள் ஏற்கெனவே போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்திருக்கிறோம். ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இதுகுறித்து கூறுகையில், "காசா தொடர்பான ஐ.நா தீர்மானம், ஹமாஸ் பயங்கரவாதிகளின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது. ஹமாஸை கண்டித்து, அவர்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஐ.நா தீர்மானம் போட்டிருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.
1. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டிப்பது
2. ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசாவிலிருந்து வெளியேறுவது
இது இரண்டையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்புகின்றன. ஆனால் ஐநா தீர்மானத்தில் இது குறிப்பிடப்படாமல் இருந்தது, அமெரிக்காவை டென்ஷனாக்கியது.
இதற்கு முன்னர் ஹாமஸ்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் அது இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே நீடித்தது. இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் போர் நிறுத்த ஒப்பந்தம் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. திரும்பவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததின்படி, நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 45 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் சண்டையின்போது தங்கள் வீரர்கள் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications