Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! எந்த நாட்டில் இப்படி ஒரு சட்டம் தெரியுமா? அமெரிக்கா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கம்பாலா: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எச்ஐவியை கட்டுப்படுத்துவதாக கூறி, ஓரின சேர்க்கையாளர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சட்டத்தை மீறும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கூட வழங்க வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் இயற்றியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

உலகம் முழுவதும் வித்தியாசமான பாலினங்களில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் அவர்களுடைய நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்காவில் கடந்த 28ம் தேதி இயற்றப்பட்ட மாற்று பாலினத்தவர்களுக்கு எதிரான சட்டம் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

US condemns anti-homosexuality law in Uganda

தன்பாலின ஈர்ப்பாளர்கள், லெஸ்பியன், இருபாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கை, திருநம்பி என ஏராளமான மாற்று (LGBTQ) பாலினத்தவர்கள் ஆப்பிரிக்காவிலும் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் தன்பாலின ஈர்ப்பாளர்களுடன் உறவு கொள்வது என்பது சட்டப்படி குற்றம் என்று ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சட்டம் அமலில் இருக்கிறது. இந்நிலையில், இந்த சட்டத்தை உகாண்டா அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

அதாவது, இனி தன்பாலின ஈர்ப்பாளர்களுடன் உறவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். அதேபோல 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று புதிய சட்டம் கூறுகிறது. இந்த சட்டத் திருத்தத்திற்கு கடந்த 28ம் தேதி அந்நாட்டு ஜனாதிபதி யோவேரி முசெவேனி கையெழுத்திட்டிருக்கிறார். இதனையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

US condemns anti-homosexuality law in Uganda

இது குறித்து அவர் கூறுகையில், "எச்ஐவி தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் உகாண்டாவும் ஒன்று. எனவே நாங்கள் இதனை கட்டுப்படுத்த இந்த கடினமாக முடிவை எடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர், அனிதா அமோங் ஜனாதிபதியின் இந்த முடிவை வரவேற்றிருந்தார். "இந்த முடிவு எங்கள் குடும்பத்தை பாதுகாக்கும், இந்நாட்டை பாதுகாக்கும். எங்கள் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

உகாண்டாவின் இந்த முடிவு உலக நாடுகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐநா சபை மற்றும் அமெரிக்கா உகாண்டாவின் முடிவுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஏனெனில் உகாண்டாவில் அதிகரித்து வரும் எச்ஐவி பாதிப்புகளை கட்டுப்படுத்த ஐநா சபையும், அமெரிக்காவும் கணிசமான அளவுக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

US condemns anti-homosexuality law in Uganda

"உகாண்டாவில் இயற்றப்பட்டுள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான புதிய சட்டம் முற்றிலும் மனித உரிமை மீறலை கொண்டிருக்கிறது. இதுபோன்று மனித உரிமை மீறலை நியாயப்படுத்தும் சட்டத்தை இயற்றுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. எனவே அந்நாட்டு நாடாளுமன்றம் இதனை மீண்டும் மறுபரிசீலனை செய்து சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி எச்ஐவி உயிர்க்கொல்லி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 89 சதவிகிதம் பேர் தங்கள் நிலையை உணர்ந்திருக்கிறார்கள். இதில் சுமார் 92 சதவிகிதம் பேர் உரிய சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இவ்வளவு கொடூரமான சட்டம் இயற்றுவதற்கான தேவை எங்கிருந்து வந்தது என்று உலக நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளன. இந்த மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை ஒரேயொரு எம்பி மட்டுமே எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+