30 ஆண்டு கால தடை நீங்குகிறது... அமெரிக்காவில் இனி "கே" ஆண்களும் ரத்ததானம் வழங்கலாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்ட ஆண்கள் ரத்ததானம் வழங்க விதிக்கப்பட்டிருந்த 30 ஆண்டு கால தடையை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது.
இனி ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்ட ஆண்களும் ரத்ததானம் செய்யலாம். இருப்பினும் இன்னொரு ஆணுடன் செக்ஸ் ரீதியான உறவு வைத்துக் கொண்டு 12 மாதங்கள் ஆன பின்னர்தான் அவர்களால் ரத்ததானம் செய்ய முடியும்.
இந்த தடை நீக்கத்தை அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறை பிறப்பித்துள்ளது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பரவலை தடுக்க பல நவீன வழிகள் வந்துள்ளதைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவு தேவையில்லை என்று ஆய்வாளர்களின் கருத்தை ஏற்று, இம்முடிவுக்கு உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை வந்துள்ளதாம்.

இருப்பினும் இந்த உத்தரவும் கூட பாரபட்சமானதே என்று ஓரினச் சேரக்கை உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கேலிக்கூத்தானது. திருமணமான, ஒரே நபருடன் குடித்தனம் செய்யும் ஒரு கே நபர் ரத்ததானம் செய்யக் கூடாது. அதேசமயம் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண் தர முடியும் என்பது நியாயமற்றது என்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஜனநாயகக் கட்சி எம்.பி ஜாரேட் போலிஸ் கூறியுள்ளா்.
ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் இதேபோல, கடைசியாக செக்ஸ் வைத்துக் கொண்ட 12 மாதங்களுக்குப் பிறகு ரத்ததானம் செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications