Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்புடன் அணுசக்தி டீலுக்கு ரெடி.. திடீரென டோனை மாற்றிய ஈரான்.. அமெரிக்காவுக்கு ‛பிக் டிமாண்ட்'

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரான் மீதான தடைகளை நீக்கினால் அணுஆயுதம் தயாரிப்பை தடுக்கும் வகையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.

இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் ரிசல்ட் வரவில்லை. இதனால் டென்ஷனாகி உள்ள டொனல்ட் டிரம்ப் விரைவில் அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்றுமிரட்டி உள்ளார்.

இதற்கிடையே தான் ஈரான் முக்கிய விஷயத்தை தெளிவுப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜீத் தக்த்-ரவாஞ்சி கூறியுள்ளதாவது: ‛‛அமெரிக்கா நேர்மையாக இருந்தால் நாங்களும் அதற்கு ஏற்க ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அமெரிக்கா தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறது. ஈரான் மீது ஏராளமான தடைகளை விதித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஓரளவு நேர்மறையான திசையில் பேச்சுவார்த்தைகள் சென்றன. இருப்பினும் இதுபற்றி இப்போதே முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் தொடக்க நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இஸ்ரேலியர்களாலும் அமெரிக்கர்களாலும் நாங்கள் தாக்கப்பட்டபோது, எங்கள் ஏவுகணைகள் எங்கள் உதவின. அதனால் ஒரு ஒப்பந்தத்த்தின் மூலமாக எங்கள் பாதுகாப்பு திறன்களை நாங்கள் இழப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? இருப்பினும் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுவதை நாங்கள் கேள்விப்படுகிறோம்.

அமெரிக்கா ஈரான் மீதான தடைகள் பற்றி பேச தயாராக இருந்தால் எங்களின் அணுசக்தி திட்டங்கள் உள்பட பிற விவகாரங்கள் பற்றி நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம்'' என்றார். இருப்பினும் ஈரான் மீதான அனைத்து தடைகளையும் நீக்க வேண்டுமா? இல்லாவிட்டால் முதலில் குறிப்பிட்ட தடைகளை நீக்க வேண்டுமா? என்பது பற்றி அவர் விளக்க மறுத்துவிட்டார்.

ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி அணுஆயுதம் தயாரிப்பதில் ஆர்வமாக உள்ளது. அதனை ஈரான் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அதன் செயல்பாடு அணுஆயுதம் தயாரிப்பை நோக்கி தான் செல்வதாக உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. அணுஆயுதம் தயாரிக்க 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. தற்போது ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. இதனால் தான் அமெரிக்கா தொடர்ந்து ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.

இன்னும் சொல்லப்பபோனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே நேரடியாக ஈரானுடன் பேச தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இப்படியான நிலையில் தான் அமெரிக்கா விதித்த தடைகளை நீக்கினால் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்துக்கு தயார் என்று அறிவித்துள்ளது.
தடைகளை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தால், தனது அணுசக்தி திட்டத்திற்கான வரம்புகள் குறித்து விவாதிக்க தெஹ்ரான் தயாராக இருப்பதாகவும் தக்த்-ரவாஞ்சி கூறினார்.

முன்னதாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஈரான் உடனான ஒப்பந்தம் பற்றி பேசினார். அதில், ‛‛டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை விரும்புகிறார். ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஈரானுடன் மேற்கொள்வது மிகவும் கடினமானதாக உள்ளது'' என்றார். அதேபோல் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறார்.

அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஈரானை சுற்றிய மத்திய கிழக்கு பிராந்தியத்தில் டொனால்ட் டிரம்ப் தனது போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளார். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+