Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய போர் வருது.. ஈரானுக்கு நாள் குறித்த டிரம்ப்! உறுதி செய்த வெள்ளை மாளிகை! இணையும் இஸ்ரேல்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் திடீரென்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது சில நாட்களில் அமெரிக்கா போரை தொடங்கலாம். இது 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போர் பல வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இருநாடுகள் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் கூட விரைவில் பெரிய போர் வெடிக்க உள்ளது. இதற்கு அண்டை நாடான இஸ்ரேல் தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதாக ஆக்சியோஸ் (Axios) செய்தி நிறுவனம் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் பரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் பற்றி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

us-iran-war-us-ready-to-military-strike-on-iran-coming-weeks-and-israel-preparing-for-scenario-s

அந்த செய்தியில் ஈரானை அமெரிக்கா குறிவைத்துள்ளதாகவும், சில நாட்களில் தாக்குதல் தொடங்கலாம் என்றும் திடுக்கிட வைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

90 சதவீதம் தாக்குதல் உறுதி

‛‛வரும் நாட்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் வரை உள்ளது. இந்த தாக்குதல் இன்னும் சில நாட்களில் தொடங்கலாம். ஈரான் மீது போர் தொடங்கப்பட்டால் அது உடனடியாக முடிவுக்கு வராது. இந்த ராணுவ நடவடிக்கை பல வாரங்கள் நீடிக்கும். மேலும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம். இதனால் இந்த போர் எளிதில் முடிவுக்கு வராது.

இஸ்ரேலுடன் சேர்ந்து..

இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது 12 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் தற்போது போர் வெடிக்கும்பட்சத்தில் அது கடந்த ஆண்டை விட பெரிய அளவில் இருக்கலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மாஜி உளவுத்துறை

இதுபற்றி இஸ்ரேல் நாட்டின் ராணுவ முன்னாள் உளவுத்துறை தலைவர் அமோஸ் யாட்லின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கிறோம். வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சில நாட்களில் போருக்கு செல்லாது என்பதை நான் கூறுகிறேன். ஏ்னென்றல் பேச்சுவார்த்தைக்கு வழி இருக்கிறது. அது நடக்காத பட்சத்தில் தான் போர் தொடங்குவார்கள்.

சலித்து போன டிரம்ப்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சலித்து போய்விட்டார் என்று அவரது ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார். ஈரானுடன் போர் புரிய வேண்டாம் என்று சிலர் எச்சரிக்கின்றனர். இருப்பினும் அடுத்த சில நாட்களில் நேரடி ராணுவ நடவடிக்கையை நாம் காண 90 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் தற்போது மோதலுக்கான வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலில் இரந்து மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு நான் விமான பயணம் மேற்கொண்டேன். ஆனால் இந்த வார இறுதியில் இஸ்ரேலில் இருந்து வெளிநாட்டுக்கு பயணிக்க வேண்டும் என்றால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பேன்'' என்று கூறியுள்ளார்.

பதற்றம் அதிகரித்துள்ளது

இதன்மூலம் அடுத்த சில நாட்களில் ஈரான் - அமெரிக்கா இடையே போர் வெடிக்கும். ஈரானை போல் இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடாக உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். அதேவேளையில் ஈரானும், இஸ்ரேல் இடையே மோதல் உள்ளது. இதனால் அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் குறிவைக்கலாம்.

இதனால் இஸ்ரேலும், அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை தாக்கலாம். இதனால் வான்வெளி பயணம் ஆபத்து நிறைந்ததாக இருக்கும். எனவே விமான பயணத்தை வார இறுதியில் தவிர்ப்பேன் என்பதை இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் உளவுத்துறை தலைவர் அமோஸ் யாட்லின் வெளிப்படுத்தி உள்ளார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு பதற்றம் அதிகரித்துள்ளது.

இருநாட்டுக்கும் என்ன பிரச்சனை?

அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. கடந்த ஆண்டு தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானை தாக்கியது. இப்போது மீண்டும் அமெரிக்கா தாக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஈரான் மீது வைக்கப்படும் அணுஆயுதம் தயாரிப்பு சார்ந்த குற்றச்சாட்டாகும்.

ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான யூதர்களின் இஸ்ரேல் மற்றும் பரம எதிரியாக உள்ள அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். இதனால் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

உடன்பாடு இல்லாத பேச்சுவார்த்தை

இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று கூட ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் டிரம்ப் கோபமாகி உள்ளார். மேலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை அவ்வளவு சுலபமானதாக இல்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

ஈரானை ஒப்பந்தத்தில் பணிய வைப்பது சிரமம் என்பது முன்பே டிரம்புக்கும் தெரியும். இதனால் ஈரானை மிரட்டும் வகையில் அவர் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் குவித்து வைத்துள்ளார். டிரம்ப் உத்தரவு பிறப்பிக்கும்போது உடனடியாக அந்த போர்கப்பல்கள், போர் விமானங்கள் ஈரானை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+