For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினச்சேர்க்கை! அவரா நீங்க? சர்ட்டை கழற்றுங்க.. உலககோப்பை கால்பந்து போட்டி நிருபருக்கு நேர்ந்த கதி

Google Oneindia Tamil News

தோகா: ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கத்தாரில் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஒருவரை தடுத்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது டீசர்ட்டை கழற்ற கூறிய சம்பவம் நடந்துள்ளது.

உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன.

நேற்று முன்தினம் இரவு துவங்கிய கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கத்தாரில் கால்பந்து போட்டி தொடர்பான செய்திகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தான் அதுதொடர்பான சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

17 பேர்.. ரூ.23 லட்சம்.. உலககோப்பை கால்பந்து போட்டியை பார்த்தே ஆகணும்.. சேட்டன்கள் செய்த ‛சம்பவம்’ 17 பேர்.. ரூ.23 லட்சம்.. உலககோப்பை கால்பந்து போட்டியை பார்த்தே ஆகணும்.. சேட்டன்கள் செய்த ‛சம்பவம்’

ஓரினச்சேர்க்கையாளருக்கு தடை

ஓரினச்சேர்க்கையாளருக்கு தடை

பீர் விற்பனை செய்ய தடை, தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் உடலுறவு வைத்து கொள்ளவும், LGBTஎனும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் (ஓரினச்சேர்க்கையாளர்) அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. LGBT என்பது Lesbian, Gay, Bisexual and Transgender ஆகியவற்றை குறிக்கும். மேலும் இவர்கள் ஓரினச்சேர்க்கையாளராக உள்ளனர். இந்நிலையில் தான் கத்தார் உலககோப்பை போட்டியையொட்டி LGBT தடைக்கு பல நாடுகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

One Love பேண்ட்

One Love பேண்ட்

இந்நிலையில் தான் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் LGBTQ சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அணியினர் One Love எனும் பேண்ட் அணிந்து களம் காண முடிவு செய்தனர். நேற்று ஈரான்-இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் முதல் முறையாக இது நடக்க உள்ளது என்ற அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் தான் One Love எனும் பேண்ட் அணிந்து விளையாடும் வீரர்களுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து வீரர்கள் பேண்ட் அணியவில்லை.

அமெரிக்கா-வேல்ஸ் அணி போட்டி

அமெரிக்கா-வேல்ஸ் அணி போட்டி

இதற்கிடையே தான் தற்போது நேற்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இங்கிலாந்து - ஈரான் அணிகள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பிறகு அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி கத்தார் அல் ரய்யானில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டியை காண ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்

பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்

இந்த வேளையில் அமெரிக்காவின் சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் எனும் பத்திரிகையில் பணியாற்றும் நிருபர் கிரண்ட் வாலை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதற்கு அவரது டீசர்ட்டில் இடம்பெற்றிருந்த வானவில் போன்ற தோற்றம் தான் காரணமாகும். வானவில்லில் 7 நிறங்கள் உள்ள நிலையில் அதேபோல் LGQTக்கு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம். ஊதா வண்ணங்கள் கொண்ட கொடி உள்ளது. இந்நிலையில் கிரண்ட் வால் ஓரினச்சேர்க்கையாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நிறுத்தினர்.

25 நிமிடம் நிறுத்தம்

25 நிமிடம் நிறுத்தம்

இதையடுத்து 25 நிமிடங்கள் கழித்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடுத்தனர். இதுபற்றி கிராண்ட் வால் கூறுகையில், ‛‛மைதானத்துக்கு நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டீசர்ட்டை கழற்றி மாற்ற வேண்டும் என கூறினார். செல்போனை பறித்தனர். அதன்பிறகு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த தலைவர் வந்து மன்னிப்பு கோரி என்னை விடுவித்து மைதானத்துக்குள் அனுமதித்தார்'' என கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

English summary
There was an incident where the security officials stopped a journalist from America who went to the World Cup football match in Qatar to take off his shirt on the issue of support homosexuality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X