ஈரான் கதை முடியுது? தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா.. ரெடியான இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் போர் பதற்றம்
டெஹ்ரான்: ஈரானில் பொதுமக்கள் போராட்டம் உச்சமடைந்துள்ளது. இதுவரை 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இஸ்ரேல் விமானப்படை தயாராக உள்ளதோடு, பதிலடிக்கு கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமான தளத்தை ஈரான் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் தொற்றி உள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நீண்டகாலமாக பகை உள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனிக்கும், டிரம்புக்கும் கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதனால் அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த போராட்டத்தனி் பின்னணயில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛ ஈரானில் மக்கள் போராட்டத்தை தடுக்க கூடாது. மக்களை கொல்லக்கூடாது. மீறினால் அமெரிக்கா தலையீடு செய்யும்'' என்று வார்னி்ங் செய்தார். ஆனால் ஈரானில் தற்போது நிலைமை எல்லை மீறி சென்றுவிட்டது.
தற்போது வரை ஈரானில் 2 ஆயிரம் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற பயம் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் தான் ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
முதற்கட்டமாக சில முக்கிய நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளம் கத்தாரில் அமைந்துள்ளது. அல் உதைத் விமான தளம் என்ற பெயரில் இது செயல்பட்டு வருகிறது. இந்த விமானப்படை தளத்தில் அமெரிக்கா விமானப்படை வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று மாலைக்குள் அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஈரான் நேரடியாக கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தை தாக்க முடியும். கடந்த ஆண்டு அமெரிக்கா, ஈரானை தாக்கிய பிறகு ஈரான் இந்த விமானப்படை தளத்தை தான் தாக்கியது.
இதனால் தற்போது அந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்களை அமெரிக்கா வெளியேற்றி உள்ளது. இதனால் இன்று இரவு அமெரிக்கா, ஈரானை தாக்கலாம். பதிலுக்கு ஈரான் தாக்கினாலம் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்படலாம் என்ற நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த உத்தரவால் இஸ்ரேலும் உஷார் நிலையில் உள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் ஏற்கனவே மோதல் உள்ளது. இதனால் இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம். எனவே இஸ்ரேல் தனது விமானப்படை மற்றும் ராணுவ வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இதுதொடர்பாக மாஃரிவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛இஸ்ரேலின் விமானப்படை, ராணுவ உளவுப்பிரிவு, வடக்கு பிராந்திய ராணுவ கட்டுப்பாட்டு மையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவம், ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த உஷார் நிலையை இஸ்ரேல் எடுத்துள்ளது.
ஈரானில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் இஸ்ரேல் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் . அமெரிக்க மத்திய படைப்பிரிவுடன் (CENTCOM) இணைந்து ஈரான் மீதான சாத்தியமான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கி உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் மீது முதலில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும். அதன்பிறகு இஸ்ரேல், அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை ‛அட்டாக்' செய்யும் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் இப்போது இந்த தகவல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்












Click it and Unblock the Notifications