எலினு நினைச்சு புலியை தொட்ட ட்ரம்ப்.. அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ஈரான்! மொத்தமா போச்சு!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் நாட்டுடன் நடைபெற்ற போருக்கு அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உலக அளவில் மிகப் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதிக அளவில் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதால் அமெரிக்காவின் ஆயுத கையிருப்பே கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஈரான் போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே 11 பில்லியன் டாலர் செலவாகியதாக சொன்ன நிலையில், தற்போது அது 1000 பில்லியனை கூட தாண்டியிருக்கலாம் என்கின்றனர்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்திய போர் சுமார் 38 நாட்கள் நீடித்தது. இந்த போரில் ஈரானில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் கட்டமைப்பு இலக்குகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

மொத்தமாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் போரில் அதிக தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

US Iran War

அமெரிக்கா ஈரான் போர்

குறிப்பாக தாக்குதலுக்கு டொமஹாக் (Tomahawk) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு டொமஹாக் ஏவுகணையின் விலை சுமார் 3.6 மில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது. இதனால் அதிக அளவில் அவற்றை பயன்படுத்தியதால் அமெரிக்காவின் கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த வகை ஏவுகணைகள் முன்பைவிட குறைந்த அளவில் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏவுகணை கையிருப்பு

அதேபோல்,Patriot வகை ஏவுகணைகளில் சுமார் 1,200 பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்ரியாட் ஏவுகணையின் விலை 4 மில்லியன் டாலருக்கும் மேல் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரான் தரப்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், அவற்றை தடுக்க அமெரிக்கா அதிக விலை கொண்ட பாதுகாப்பு ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு ஆயுதங்களின் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளது.

JASSM வகை ஏவுகணை

மேலும், அதேபோல், வானில் இருந்து தரை இலக்குகளைத் தாக்கும் JASSM வகை ஏவுகணைகளில் சுமார் 1,100 பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் 600 மைல் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இதன் விலை சுமார் 1.1 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. தற்போது இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க கையிருப்பில் 1,500 மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போரின் போது ஈரான் தரப்பும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.

அமெரிக்க ராணுவ முகாம்கள்

குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் இலக்காக தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் ரேடார் அமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள், போர் விமானங்கள் நிறுத்தப்படும் தளங்கள் மற்றும் ஓடுதளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சில இடங்களில் அமெரிக்க வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு நஷ்டம்

மேலும், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறியும் சில தாக்குதல்கள் நடைபெற்றதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள ஏழு முக்கிய ராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேதங்களை பழுது பார்க்க பெரிய அளவிலான நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

11 பில்லியன் டாலர்

இந்தப் போரின் தொடக்கத்திலேயே முதல் வாரத்தில் மட்டும் 11 பில்லியன் டாலர் செலவாகியதாக முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது மொத்த சேதமும் செலவும் இதைவிட அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீண்டும் கையிருப்பில் கொண்டு வர கூடுதல் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவம் செனட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவ செலவுத் திட்டம்

ஏற்கனவே மிகப்பெரிய ராணுவ செலவுத் திட்டம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், தற்போது கூடுதலாக நிதி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஈரான் போரின் விளைவாக அமெரிக்காவுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் வெறும் மனித இழப்புகளாக மட்டுமல்லாமல், ஆயுத கையிருப்பு, ராணுவ கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார செலவுகள் ஆகிய அனைத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் சொல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+