ரவுண்டு கட்டிய அமெரிக்கா.. கிம் ஜாங் போட்ட பக்கா ப்ளான்! வடகொரியாவில் குவிந்த ரஷ்ய, சீன அதிகாரிகள்
பியோங்யாங்: அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தென் கொரியா கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஆதிக்கங்களையும், அத்துமீறல்களையும் தீவிரமாக எதிர்ப்பதில் வடகொரியா எப்போதும் ஓரடி முன்னால் இருக்கும். அமெரிக்காவும் இதை வெறுமென வேடிக்கை பார்க்காமல், வருஷத்துக்கு பாதி நாட்கள் எதையாவது பெயர் வைத்து கொண்டு ஜப்பான், ஆஸ்திரேலியா என தென்கொரியா கடலில் கூட்டு ராணுவ பயிற்சிக்கு அமெரிக்கா கிளம்பிவிடும்.

இது வடகொரியாவுக்கு நேரடி அச்சுறுத்தல் என்பதால் வடகொரியாவும் அடிக்கடி ஏவுகணைகளை ஏவி சோதனை செய்யும். இப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில், இந்த மறைமுக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேரடியாக களத்தில் இறங்க அமெரிக்கா ஓரடி முன் வந்துள்ளது. அதாவது தென் கொரியாவுக்கு அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான 'கென்டக்கியை' சில நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்தது. ஏற்கெனவே உக்ரைனை தூண்டிவிட்டு அமெரிக்காதான் ரஷ்யாவுடன் போரை நடத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது வடகொரியாவிடம் போரை நடத்த தென்கொரியாவை தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் வடகொரியா தனக்கான ஆதரவை திரட்டி வருகிறது. அதாவது இந்த வாரம் முழுவதும் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 70ம் ஆண்டு நிறைவு விழாவை வடகொரியா கொண்டாடி வருகிறது. எனவே இதனை காரணமாக வைத்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளை தனது நாட்டிற்கு அழைத்திருக்கிறது.

1950 முதல் 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரிய போரில் சோவித் ரஷ்யாவின் உதவியுடன் வடகொரியா வெற்றி பெற்றது. இதன் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த போரின் வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த ஒருவாரம் வடகொரியா முழுவதும் விழாக்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. இந்த விழாக்களுக்குதான் ரஷ்ய மற்றும் சீன அதிகாரிகளை வடகொரியா அழைத்திருக்கிறது.
சோவியத் ரஷ்யா காலத்திலிருந்து ரஷ்யா, சீனா நாடுகளுடன் வடகொரியா தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தது. தற்போதும் இரு நாடுகளுடன் வர்த்தக போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தென்கொரியாவுக்கு உதவி வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த இரு நாட்டின் தலைவர்களுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நிலைமை மோசமானால் இந்த இரு நாடுகளும் வடகொரியாவுக்கு ஆயுதங்களை கொடுக்க ஒப்புக்கொள்ளும் என்றும் சொல்லப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மோசமான விஷயமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications