டிரம்ப்பின் முதல் லிஸ்டில் தப்பித்த இந்தியா! மாட்டிய சீனா, கனடா! அமெரிக்காவின் அடுத்த குறி நாம்தான்?
சென்னை:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார்.
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.2 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் ஒன்பதாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியா இல்லை.
எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது போக டாலர் வர்த்தகம் தாண்டி, இந்தியாவின் வரி விதிப்பு முறையை காரணம் காட்டி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது 20% கூடுதல் வரியை விதிக்கவும் டிரம்ப் முயல்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ மீது அவர் விதிக்கும் 20% வரி இந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. மேலும் சீனா மீதான வரியை அடுத்த வாரம் அறிவிப்பார். அதன்பின் இந்தியா மீதான வரியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்தியா மாஸ்டர் பிளான்:
இதை சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் .
1. அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம்.
2. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம்.
3. சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
4. ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
5. அதோடு டாலர் வர்த்தகத்தை விட்டு மாற மாட்டோம் என்று இந்தியா மீண்டும் உறுதி அளிக்கும் என்கிறார்கள் . ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
6. இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்காவிற்கு சாதகமாக மாறி உள்ளது. டாலர் வர்த்தகத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. ஆனாலும் பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியா மீண்டும் அமெரிக்காவை சமாதானம் செய்யும் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.
7. அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.
8. அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொள்ளும். இரண்டு தரப்பும் சமமாக பேசி.. இரண்டு தரப்பிற்கும் ஏற்ற வரி விதிமுறைகளை கொண்டு வரும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications