For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. பணத்துக்காக பொய் சொல்றாங்க.. டாக்டர்கள் மீது பாயும் டிரம்ப்..!

டாக்டர்கள் மீது அதிபர் டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

வாட்டர்போர்ட், மிச்சிகன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தற்போது கொரோனாவைரஸ் விவகாரம் தொடர்பாக டாக்டர்கள் மீது பொய்யான பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளதால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனைக் கடித்த கதையாக மாறிவிட்டார் டிரம்ப். கொரோனாவைரஸ் பலி எண்ணிக்கையை வேண்டும் என்றே டாக்டர்கள் அதிகமாக சொல்வதாகவும், பணத்துக்காக இப்படி பேசுவதாகவும் அவர் அபாண்டமான பழி ஒன்றைத் தூக்கி டாக்டர்கள் மீது போட்டுள்ளார்.

 US Presidential Election: Trump blames doctors

டிரம்ப்பின் இந்த பேச்சால் அமெரிக்க டாக்டர்கள் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது... இதுதொடர்பாக மிச்சிகன் மாகாணத்தின் வாட்டர்போர்டு நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், நாடு முழுவதும் கொரோனாவைரஸ் காரணமாக பலர் உயிரிழந்து வருவதாக டாக்டர்கள் கூறுவதை நான் நம்ப மாட்டேன்.. பணத்துக்காக இப்படி சொல்கின்றனர்.

யாராவது கொரோனாவால் இறந்தால் டாக்டர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. சரியா? நம்ம டாக்டர்கள் ரொம்ப புத்திசாலி. எனவேதான் ஈஸியாக பணம் சம்பாதிக்க கொரோனா பலியை காரணமாக பயன்படுத்துகின்றனர்... இதை சொல்வதற்கு நான் வருத்தப்படுகிறேன்.. ஆனால் எல்லோரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை என்பதே உண்மை என்று பேசியுள்ளார் டிரம்ப்.

வந்தாச்சு வந்தாச்சு "விண் படை".. அண்ணன் டிரம்ப் அவர்களே.. அப்படியே வைரஸ் படையையும் ஆரம்பிங்க!

டிரம்ப்பின் இந்த பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. டாக்டர்கள் பணம் வாங்குவதாக அமெரிக்காவில் இதுவரை எந்த சர்ச்சையும் வெடிக்கவில்லை... ஆனால் டிரம்ப் இப்படிப் பேசியுள்ளது சலசலப்பை கிளப்பியுள்ளது. மறுபக்கம் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அங்கு 90 ஆயிரம் புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. மேலும் 929 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டிரம்ப் மறுபக்கம் பொறுப்பில்லாமல் பேசி வருவதாக சர்ச்சையாகியுள்ளது.

டிரம்ப்பின் பேச்சுக்கு அமெரிக்க மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டிரம்ப் பெயரை குறிப்பிடாமல், டாக்டர்களின் சேவை குறித்து தவறான, அவதூறான கருத்துக்களை வெளியிடுவது கண்டனத்துக்குரியது.. முழுமையாக தவறான செய்தி இது என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

English summary
US Presidential Election: Trump blames doctors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X