வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஈரானின் பொருளாதாரத் தடையை நீக்க தயார்: அமெரிக்கா அறிவிப்பு
ஜெனீவா: ஈரான் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடந்து கொண்டால் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தனது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த உலக நாடுகளின் கவலையைப் போக்கும் வகையில் ஈரான் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு நாளாகும் என்ற போதிலும் அதைச் செய்ய வேண்டியது ஈரானின் கடமை என்றும் அமெரிக்க கூறியுள்ளது.
ஜெனீவாவி்ல், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
அதன் பின்னர் அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரே இரவில் அதிசயம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க்க கூடாது. பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஈரான் தான் சொன்னதைச் செய்தால், உலக நாடுகளின் கவலையைப் போக்கும் வகையில் நடந்து கொண்டால், ஈரானுக்கு அனைத்து சர்வதேச பொருளாதாரத் தடைகளையும் நீக்க அமெரிக்கா முன் வரும் என்றார்.
ஈரான் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தது அது என்றும் அவர் கூறினார். ஆனால் தனது அணு திட்டங்கள் அமைதிக்கானவை என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டுக் கொள்கைப் பிரிவு தலைவர் காத்தரீன்அஷ்டனும் கலந்து கொண்டார்.
பின்னர் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவேத் சரீப் கூறுகையில், ஈரான் தனது நிலைப்பாட்டையும், நிலையையும் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications