இந்தியாவில் திருடப்பட்ட சென்னை கோவில் சிலை 200 கலைப்பொருட்கள் மோடியிடம் ஒப்படைப்பு
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்களை அமெரிக்கா பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து சிலைகள் உள்ளிட்ட 200 கலைப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
அவற்றின் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியாவில் உள்ள பல வழிபாட்டுத் தளங்களில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் தான் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
A focus on heritage & culture...I thank the US government for the return of precious cultural artefacts to India. pic.twitter.com/9mxjtEU527
— Narendra Modi (@narendramodi) June 7, 2016
மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் சென்னையில் உள்ள சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட சோழர் காலத்து மாணிக்கவாசகர் சிலையும் அடக்கம். மேலும் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தால் ஆன விநாயகர் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலைகளை பெற்றுக் கொண்ட மோடி கூறுகையில்,
இந்த பழமை வாய்ந்த பொருட்களின் மதிப்பு தான் சிலருக்கு தெரியும். ஆனால் இது பணத்தையும் தாண்டிய விஷயம். இது எங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றார்.
இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கலாச்சாரம், பாரம்பரியம்...விலைமதிப்பில்லா இந்த கலாச்சார பெருமை வாய்ந்த பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications