இந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ
ஹொனுலுலு: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயச்சியை அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்கா சுட்டிக்காட்ட வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது. அமெரிக்காவை சீனா மிக மோசமாக விமர்சித்து வருகிறது.

இதனால் அமெரிக்கா- சீனா உறவில் படுமோசமான விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹவாய் தீவுகளின் தலைநகர் ஹொனுலுலுவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயச்சியை அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்து பேசுகிறார்.
இச்சந்திப்பு தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் முன்கூட்டியே எந்த ஒருதகவலையும் வெளியிடாமல் வைத்திருந்தது. சீனாவின் யங் ஜெயச்சிதான் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் எல்லை விவகாரங்கள் குறித்து யங் ஜெயச்சி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தற்போது லடாக் எல்லையில் சீனா ஊடுருவி 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்திருக்கிறது.
இந்த நிலையில் யங் ஜெயச்சியுடனான சந்திப்பில் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ இது குறித்தும் சுட்டிக்காட்டி விவாதிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications