போச்சுடா.. ஏற்கனவே 7ம் பொருத்தம்.. இதுல இதுவேறயா! வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்
பியாங்யோங்: அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்திருக்கிறார். தற்போது அவரை கைது செய்துள்ள ராணுவம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச நாடுகளின் நாட்டாமை நான்தான் என்று கடந்த காலத்தில் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுவரை 81 நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் 'நேட்டோ' மூலம் ஆசிய நாடுகளில் கால் பதிக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. அது ஒருபக்கம் இருக்க இதற்கான சோதனை முயற்சியை உக்ரைனை கொண்டு மேற்கொண்டுள்ளது.

ஒருவேளை உக்ரைனை நேட்டோவில் இணைப்பதில் வெற்றிபெற்றுவிட்டால் ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதேபோல தென் கொரியாவிலும் நேட்டோ நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது ஏதாவது ஓர் பெயரை வைத்துக்கொண்டு இரு நாடுகளும் அடிக்கடி ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இது வடகொரியாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே இதனை சமாளிக்க வடகொரியாவும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆக இப்படியாக இரு நாடுகளும் மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கும் நிலையில் தான் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அதாவது அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் தென் கொரியாவிலிருந்து, அத்துமீறி வடகொரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். டிராவிஸ் கிங் எனும் 23 வயது அமெரிக்க ராணுவ வீரர் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ படையில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாய் தகறாரில் ஒருவரை சரமாரியாக தாக்கிய வழக்கில் 2 மாத காலம் சிறையில் கழித்திருந்தார்.

இந்நிலையில், சிறையிலிருந்து வெளியான பின்னர் வடகொரியாவில் அத்துமீறி ஊடுருவியுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "டிராவிஸ் வடகொரியாவின் பன்முன்ஜோம் கிராமத்தில் உள்ள ஓர் கட்டிடத்திற்கு கத்திக்கொண்டே ஓடினார். நாங்கள் இதனை முதலில் காமெடியாக பார்த்தோம். ஆனால் அவர் மீண்டும் திரும்பவேயில்லை. அதன் பின்னர்தான் இது ஒரு தீவிர பிரச்னை என்பது எங்களுக்கு புரிந்தது" என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "எங்கள் வீரர் வடகொரிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்று நம்புகிறோம். அவரை மீட்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் வடகொரியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள் யாரும் உருப்படியாக நாடு திரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications