இந்தியாவுக்கு எப்படி வரி போடலாம்? டிரம்பை விளாசிய சீனா! வலுவாகப்போகும் மோடி - ஜி ஜின்பிங் பந்தம்?
பெய்ஜிங்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் டிரம்ப் சீனா சென்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ள நிலையில் சீனா நமக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளது இருநாடுகள் இடையேயான பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த கச்சா எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. இது நம் நாட்டுக்கு சாதகமாக உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்பால் பொறுத்து கொள்ளவில்லை. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா உதவுகிறது என்று டிரம்ப் கூறினார்.

மேலும் ரஷ்யா உடனான வர்த்தகத்தால் இந்தியாவுக்கு அபராதம், வரி என்று 25 சதவீதத்தை கடந்த 1ம் தேதி அறிவித்தார். அதன்பிறகு நேற்று இன்னொரு 25 சதவீத வரியை அறிவித்தார். இதன்மூலம் மொத்தம் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போடப்பட்டுள்ளது. இதில் 25 சதவீத வரி இன்று முதலும், அடுத்த 25 சதவீத வரி வரும் 27 ம் தேதிக்கு பிறகும் நடைமுறைக்கு வருகிறது.
டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்பை நம் நாடு கடுமையாக கண்டித்துள்ளது. இது நியாயமற்றது. துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் தேச நலனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டுக்கு டிரம்ப் விதித்த வரிக்கு நட்பு நாடான ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க குவோ ஜியாகுன் கூறுகையில், ‛‛வரிகளை தவறாக பயன்படுத்துவதற்கு சீனா எப்போது எதிர்ப்புதெரிவிக்கும். இது நிலையான முடிவாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்துள்ளது. அதோடு வரி விதிப்பை தவறாக பயன்படுத்தி வரி எப்படி போடலாம் என்று சீனா கேள்வி கேட்டுள்ளது.
மேலும் இதன் பின்னணியில் இன்னொரு விஷயமும் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவை விட சீனா அதிகளவில் கச்சா எண்ணெய், கியாஸ் உள்ளிட்டவற்றை வாங்குகிறது. ரஷ்யாவிடம் இந்த பொருட்களை வாங்குவதாலேயே சீனாவுக்கு இன்னும் தனியாக வரி விதிக்கப்படவில்லை. இந்தியாவை தொடர்ந்து அடுத்து சீனாவுக்கும், டிரம்ப் வரி விதிக்கும் அபாயம் உள்ளது. இப்படியான சூழலில் தான் சீனா, அமெரிக்காவிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
சீனாவை எடுத்து கொண்டால் அமெரிக்காவுடன் பிரச்சனை உள்ளது. சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு தாறுமாறாக வரிகள் விதித்தார். பதிலுக்கு சீனாவும், அமெரிக்காவுக்கு வரிகளை விதித்தது. அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அரிய கனிமங்கள் நிறுத்தப்ட்டன. இதனால் பயந்த டிரம்ப் சீனா மீதான வரியை இடைநிறுத்தினார். தற்போது 30 சதவீத வரியை தான் டிரம்ப் சீனாவுக்கு விதித்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து டிரம்ப் நம் நாட்டை டார்க்கெட் செய்து 50 சதவீதம் வரி போட்டுள்ளது. இதனால் விரைவில் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக கைகோர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான முதற்படியாக தான் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் சீனாவுக்கு சென்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவில் உள்ள தியான்ஜின் செல்கிறார். அங்கு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அதாவது கடந்த 2019 ஆம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர்.
இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வரும் நிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையேயான உறவு கடந்த 6 ஆண்டுகளாக மோசமான நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு நடுவே மோடி சீனா செல்கிறார். இதனால் டிரம்ப் மூலம் இந்தியா - சீனா இடையேயான உறவு வலுப்படுகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications