ராஃபா சூழல்.. யார் சொல்லியும் கேட்காத நெதன்யாகு! வார்னிங் கொடுக்க இஸ்ரேலுக்கு வரும் அமெரிக்க அதிகாரி
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் வருகை தர இருக்கிறார். இதனால், இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி இருக்கையில் எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ராஃபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். காசா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீன மக்கள் ராஃபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.
இங்கு மொத்தம் 10-15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல், இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த பின்னணியில்தான் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் நாளை இஸ்ரேல் வர இருக்கிறார். ராஃபா எல்லையில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுதங்களில் முக்கிய ராக்கெட்டுகளையும் அமெரிக்கா நிறுத்தியிருந்தது. போர் மேலும் நீடித்தால், விளைவுகள் மோசமாகும். அதில் அமெரிக்கா தலையிடாது என்றும் கூறியிருந்தது.
இந்த பின்னணியில்தான் ஜாக் சல்லிவன் இஸ்ரேலுக்கு வருகிறார். இதனால், இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சல்லிவன், இஸ்ரேலின் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என முக்கிய தலைவர்களை சந்திக்கிறார்.
-
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
ஈரானிடம் இருக்கும் செக் பாயிண்ட்.. ஹார்மூஸ் மூடும் டிரம்பின் முடிவுக்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு? -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா..இந்தியாவுக்கு வலிக்கும்! சாப்பாட்டுக்கே அல்லாடப் போகும் 25 லட்சம் இந்தியர்கள்! -
அதிபருக்கு நெருக்கமானவர்களை தூக்கிய.. மாஜி இஸ்ரேல் மொசாட் ஏஜென்ட்கள்... அதிரும் ஐரோப்பா! -
மேற்காசிய போருக்கு நடுவே.. திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. ஆலோசித்தது என்ன? -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications