உற்றுநோக்கும் உலகம்.. முதல்முறை சந்திக்கும் இரு துருவங்கள்! அமெரிக்கா -சீனா அதிபர்கள் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

பாலி: இந்தோனேசியாவில் இன்று நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

நவம்பர் 14 ஆம் தேதியான இன்று 17 வது G 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் தொடங்க உள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஜி 20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுகிறது. இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

ஜி 20 மாநாடு

ஜி 20 மாநாடு

இந்த ஜி 20 மாநாட்டில் சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் ஆகிய 3 தலைப்புகளின் கீழ் மூன்று அமர்வுகள் இடம்பெறுகிறது. இதன் கீழ் உலக தலைவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்படுகிறார்.

அமெரிக்கா - சீனா

அமெரிக்கா - சீனா

இந்த ஜி 20 நாடுகளின் குழுவில் இடம்பெற்று இருக்கும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளன. அமெரிக்கா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனும், சீனா சார்பில் அதன் அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க உள்ளார்.

முதல் முறை

முதல் முறை

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. அதேபோல் சமீபத்தில்தான் சீன அதிபராக 3 முறை தேர்வு செய்யப்பட்டார் ஜி ஜின்பிங். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஜி ஜின்பிங்கை அவர் சந்திக்க உள்ளார்.

இருவேறு துருவம்

இருவேறு துருவம்

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே சமீபத்தில் மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா போரில் இரு நாடுகளும் வெவ்வேறு நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளாக திகழும் சீனாவும் அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன.

போர்

போர்

ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - அமெரிக்கா வர்த்தகப்போர், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பொருளாதார நிலையும் மோசமடைந்துகொண்டே செல்கிறது. பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தபடி செல்வது அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

 எதிர்பார்க்கும்

எதிர்பார்க்கும்

இந்த நிலையில் இரு நாடுகளின் பொருளாதார நிலை, பருவ நிலை மாற்றம், சர்வதேச விவகாரம் தொடர்பாக ஜோ பைடனும் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எதிரெதிர் துருவங்கள் முதல்முறையாக சந்திப்பது உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+