நீங்க "புலி"... ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ பெயரைச் சேர்த்த மலேசியா!
மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என மலேசிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்திற்காக மலேசியா சென்றார் வைகோ.
கோலாலம்பூரில் வானூர்தி நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ பெயர் இடம்பெற்றிருப்பதாக கூறி அவருக்கு தடை விதித்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் குற்றத்சாட்டியுள்ளனர். வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஸ்போர்ட் பறிமுதல்
வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலோசியா அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். இன்று இரவு 10.45 மணி விமானத்தில் வைகோ திருப்பி அனுப்பப்படுகிறார்.

தொண்டர்கள் கண்டனம்
வைகோவுக்கு மலேசிய அரசு தடைவித்திருப்புதற்கு மதிமுக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசத் துரோக வழக்கில் சிறைக்கு சென்ற வைகோ அண்மையில் தான் விடுதலையானார்.

ஆபத்தானவர் என தடை
இந்நிலையில் மலேசியா சென்ற அவரை அந்நாட்டு அரசு ஆபத்தானவர் என தடை விதித்து திருப்பி அனுப்புகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications