ட்ரம்ப் மகனுக்கு வந்த மர்ம பார்சல்... முகர்ந்து பார்த்த மனைவி வனேசா மயக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அமெரிக்க அதிபரின் மகனுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந்த மருமகள் மயக்கம்- வீடியோ

  நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மருமகள் வனேசா ட்ரம்ப் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவருக்கு வந்த மர்ம பார்சலில் இருந்த வெள்ளைப் பொடியை நுகர்ந்ததால் மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு டிரம்ப் தந்தையின் செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு திங்கட்கிழமையன்று ஒரு மெயில் வந்துள்ளது. அதனை அவருடைய மனைவி வனேசா ட்ரம்ப் வாங்கிப் பார்த்துள்ளார்.

  அஞ்சல் உறையை திறந்து பார்த்த போது அதில் வெள்ளி நிறத்தில் ஒரு பொடி இருந்துள்ளது. அந்தப் பொடியை முகர்ந்து பார்த்ததில் வனேசாவிற்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  ஜூனியர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

  ஜூனியர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

  வனேசா முகர்ந்து பார்த்த பொடியை சோதனை செய்ததில் அது அபாயகரமானதல்ல என்று தெரியவந்துள்ளது. எனினும் இது வெறுக்கத்தக்க செயல் என்று ஜூனியர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அதிர்ஷ்டவசமாக தன்னுடைய குழந்தைகளுக்கும், மனைவிக்கும் எந்த ஆபத்தும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  எதிர்ப்பை இப்படி காட்டக்கூடாது

  எதிர்ப்பை இப்படி காட்டக்கூடாது

  தங்களது எதிர்ப்பை காட்ட நினைப்பவர்கள் இது போன்று அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் ஜூனியர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து டுவீட்டியுள்ள ட்ரம்ப்பின் மகள் இவாங்கா, யாரையும் இது போன்று மிரட்டல்கள் மூலம் அச்சுறுத்தக்கூடாது. அவர்களுக்கு மன்னிப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  2017 முதல் வெள்ளை மாளிகையில்

  2017 முதல் வெள்ளை மாளிகையில்

  5 குழந்தைகளின் தாயான வனேசாவின் கணவர் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எரிக் ட்ரம்ப் இருவரும் நியூயார்க்கில் குடும்பத் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலை பார்த்து வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் இவர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு டொனால்டு ட்ரம்பால் அழைக்கப்பட்டனர்.

  மீண்டும் ஆந்த்ராக்ஸ் பொடி பீதி

  மீண்டும் ஆந்த்ராக்ஸ் பொடி பீதி

  அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டில் ஆந்த்ராக்ஸ் தடவிய அஞ்சல் உறைகள் ஊடக நபர்கள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டன. அதன் பாதிப்பில் 5 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து அந்நாட்டில் வெள்ளை நிற பொடி தடவிய அஞ்சல் உறைகள் எதுவும் அனுப்பப்பட்டால் அதனை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  US President Donald Trump’s daughter-in-law Vanessa was taken to a New York hospital after a suspicious package containing unidentified powder was mailed to the family home

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற