3 ஆண்டுகளாக காத்திருந்து காத்திருந்து... தற்போது கேமராவில் பிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளைநிற கடமான்
சுவீடன் நாட்டில் மிகவும் அரிய வகை இனமான வெள்ளை கடமான் ஒன்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடிக்கும் காட்சிகள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை இனமான வெள்ளை சுடமான் ஒன்று ஏரியில் தண்ணீர் குடிக்கும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
பணத்துக்காகவும், இறைச்சிக்காகவும் விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சில விலங்குகள் பரவலாக இருந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே உள்ளன.
அந்த வகையில் அரிய மான் வகையான வெள்ளை கடமான் ஒருவரது கேமராவில் பிடிப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில் உள்ள ஒரு ஏரியில் தண்ணீர் குடிக்கும் போது கேமராவில் பிடிப்பட்டது.

3 ஆண்டுகள் காத்திருப்பு
வெள்ளை கடமான் பொதுவாக சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மிகவும் அரிதாகவே கண்களில் தென்படும். இந்நிலையில் கடமானை எப்படியாயினும் கண்டே தீர வேண்டும் என்று அன்ஸ் நீல்சன் என்பவர் 3 ஆண்டுகளாக காத்திருந்தார்.

தினமும் பார்வை
அந்த ஏரியில் அந்த கடமான் தண்ணீர் குடிக்கும் என்பதை அறிந்த அன்ஸ் தினந்தோறும் அந்த ஏரிக்கு சென்று வருவார். இதேபோல் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் ஏரியில் அந்த மான் தண்ணீர் குடித்து கொண்டிருந்தது.

படம்பிடித்தார்
உடனே கையில் இருந்த கேமராவுடன் காத்திருந்தார். பின்னர் ஏரியின் மறுமுனைக்கு சென்ற அந்த மான் அங்கிருந்த இலை தழைகளை திண்றது. அதன்பின்னர் திரும்பி பார்த்து இவரது கேமராவுக்கு அந்த மான் போஸ் கொடுத்தது.

சமூக வலைதளங்கள்
வெள்ளை கடமானை வீடியோ எடுத்த பதிவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இந்த மானின் வெள்ளை நிறம் அதன் மரபணு மாற்றத்தால் வந்ததே தவிர, அதன் நிறம் வெளுத்ததால் அல்ல என்று தகவல்கள் கூறுகின்றன.
|
100 மான்கள் மட்டுமே
இந்த வெள்ளை கடமானாது சுவீடனில் வெறும் 100 எண்ணிக்கையே உள்ளன. இதன் நிறத்தால் எளிதாக வேட்டைக்காரர்களிடம் சிக்கி மடிந்து விடுகின்றன. இந்த மான் வேட்டையர்களுக்கு தென்பட்டால் அன்று அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது என்றே அர்த்தமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications