கருப்பாக மாறிய வானம்.. டோங்காவில் சுனாமி ஏற்படும் முன்.. கடலில் என்ன நடந்தது தெரியுமா? பரபர வீடியோ
டோங்கா: கடலுக்குள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக டோங்கா நாட்டில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ஆஸ்திரேலியாவிற்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்து இருக்கும் தீவு தேசம்தான் டோங்கா. பழங்குடி இன மக்கள் அதிகம் கொண்ட, இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசம் இது. நான்கு பக்கமும் சுற்றி கடல் இருக்கும் அழகான சுற்றுலா தேசம் ஆகும்.
இந்த நிலையில்தான் டோங்கா நாட்டில் இன்று காலை திடீரென மாபெரும் சுனாமி ஏற்பட்டது. எரிமலை வெடிப்பு காரணமாக அங்கு பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டுள்ளது.

எங்கே சுனாமி?
டோங்கா நாட்டின் தலைநபர் நுகுஆலோபா அருகே இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது. தலைநகரின் பெரும்பாலான பகுதிக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் மூழ்கி உள்ளன. டோங்கா கடல் பகுதியில் இன்று காலை எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. ஹுங்கா டோங்கா என்ற பிரபல எரிமலை பெரிய அளவில் வெடிக்கும் தருவாயில் இருந்தது. இந்த எரிமலை கடந்த ஒரு வாரமாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெடித்து வந்தது.

டோங்கா சுனாமி
ஆனால் இதற்கு முந்தைய வெடிப்புகள் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. இதையடுத்து இன்று காலை அங்கு ஏற்பட்ட பெரிய எரிமலை வெடிப்பு கடலுக்குள் உள்ளே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் திடீரென கடல் அலைகள் மேலே எழுந்து சுனாமி ஏற்பட்டது. எரிமலை வெடிப்பு காரணமாக உருவான ஷாக் அலைகள் காரணமாக கடல் கொந்தளித்து சுனாமி ஏற்பட்டது.

எப்படி வெளியே வந்தது?
உதாரணமாக ஒரு குடம் தண்ணீரில் உள்ளே பெரிய குண்டு வெடித்தால் குடத்தில் இருக்கும் தண்ணீர் எப்படி வெளியே வரும். அப்படிதான் உள்ளே வெடித்த எரிமலையால் கடல் கொந்தளிப்பு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்த சுனாமி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. இந்த சுனாமியால் பலர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மாற்றங்கள்
இந்த எரிமலை வெடித்த அந்த நொடிக்கும், சுனாமி ஏற்பட்டதற்கு இடையில் இரண்டு அதிர்ச்சி தரும் சம்பவங்கள்
டோங்காவில் நடந்துள்ளது. முதல் விஷயங்கள்.. அங்கு எரிமலை வெடித்ததும் திடீரென புழுதி கிளம்பி சென்று வானம் முழுக்க மறைத்து இருக்கிறது. இதனால் சூரியனை சுற்றி புகைமண்டலம் ஏற்பட்டுள்ளது. இது அப்படியே டோங்காவை இருளாக மாற்றி உள்ளது. பட்டப்பகல் அப்படியே சில நிமிடங்களில் நடு இரவு போல மாறி இருக்கிறது.

புழுதி புயல்
புழுதி புயல் போல அப்படியே வானத்தை நோக்கி புகை மண்டலம் சென்றதால் திடீரென வானம் இருளாக மாறியது. இதை பார்த்து அங்கிருந்த மக்கள் எல்லோரும் குழம்பி போய் இருக்கிறார்கள். அந்நாட்டு மக்கள் பலர் வானத்தில் இருந்து புழுதி, தூசுகள், சாம்பல்கள் மழை போல கொட்டியதாக குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது விஷயம்.. எரிமலை வெடிப்பால் அங்கு அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. அங்கு கடலுக்குள் எரிமலை வெடித்தது சாட்டிலைட்டில் பதிவாகி உள்ளது.

சாட்டிலைட் காட்சி
கடல் அப்படியே பிளந்து நீர் வெளியே வருவது சாட்டிலைட்டில் பதிவாகி வீடியோவாக வெளியாகி உள்ளது. இது 80 செமீ உயரம் வரை அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த அலைகள் கடல் எல்லைக்கு வந்து கரையில் 2 அடி உயரம் வரையிலான அலைகளை ஏற்படுத்தி உள்ளது. எரிமலை வெடித்து கடல் பிளந்து அலைகள் கொந்தளிக்கும் வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.. இந்த காட்சிகள் பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications