கடனை பற்றி கவலையேபடாமல் லண்டனிலிருந்து ஐபிஎல் பைனலை ரசித்த மல்லையா!
லண்டன்: வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா, லண்டனில் அமர்ந்தபடி தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து ஜாலியாக ஐபிஎல் கிரிக்கெட் பைனல் போட்டியை பார்த்து ரசித்ததோடு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பாக்கி மற்றும் கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா திடீரென லண்டன் தப்பியோடிவிட்டார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்துவர ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதேநேரம், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மல்லையாவை நாடு கடத்த முடியாது என்றும், அதற்கு தங்கள் சட்டம் இடம்தரவில்லை என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நடுவேயான ஐபிஎல் இறுதி போட்டியை மல்லையா தனது மகன் சித்தார்த்துடன் அமர்ந்து டிவியில் பார்த்து ரசித்துள்ளார்.
இந்த வீடியோவை சித்தார்த் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நானும், எனது தந்தையும் ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்கிறோம்.. என்று சித்தார்த் வர்ணனை செய்ய, மல்லையாவோ, "கோ ஆர்சிபி.." என உற்சாகமூட்டும் வகையில் பேசுகிறார். இருவரும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பார்த்த கிங்பிஷர் ஊழியர்கள் கொதித்துப்போயுள்ளனர்.
கிங்பிஷர் முன்னாள் ஊழியர் நீத்துசுக்லா கூறுகையில், மல்லையா விஷயத்தில் பாஜகவை காங்கிரஸ் குற்றம்சாட்டுவதில் பிரயோஜனமில்லை. காங்கிரஸ் அரசில்தான், மல்லையா பணம் சம்பாதிக்க உதவி செய்யப்பட்டது. இப்போது மல்லையாவை எப்படியாவது இந்தியாவுக்கு இழுத்துவர வேண்டியது மத்திய அரசின் கடமை. அப்படி செய்தால்தான் மற்ற அரசுகளுக்கும், மோடி அரசுக்கும் வித்தியாசம் உண்டு என்பது நிரூபணமாகும் என்றார்.
கடன், மோசடிக்காரரை போல இன்றி, மல்லையா தனது வாழ்க்கையை என்ஜாய் செய்து கொண்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications