"சைலெண்ட் மோட் ஓவர்.." திடீரென ரஷ்யா திரும்பிய வாக்னர் படை தலைவர்.. படைகள் எல்லாம் எங்கே! பரபரப்பு
மாஸ்கோ: ரஷ்யா அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட முயன்ற அந்நாட்டின் தனியார் ராணுவமான வாக்னர் பிரிவு தலைவர் ப்ரிகோஜின் மீண்டும் ரஷ்யா திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உக்ரைன் நாட்டுடன் தொடங்கிய போர் ஓராண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில வாரங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர் 1.5 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் அங்குள்ள தனியார் ராணுவமான வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் திடீரென அந்நாட்டில் கிளர்ச்சி நடத்தினார். இதனால் அங்கே பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. இருப்பினும் இது சில நாட்கள் மட்டுமே நீட்டித்தது.

உள்நாட்டுப் போர் சூழல்: திடீரென அவர்கள் போர்க்கொடி தூக்கியதால், ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் பெலராஸ் அதிபர் நேரடியாகத் தலையிட்டார். வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் இதற்காக பெலராஸ் நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், எவ்ஜெனி ப்ரிகோஜின் தனது கிளர்ச்சியைக் கைவிட்டார்.
ஆனால், அதன் பின்னரும் ப்ரிகோஜின் தொடர்ந்து பெலராஸ் நாட்டிலேயே இருந்து வந்தார். அவர் ஏன் ரஷ்யாவுக்குத் திரும்பாமல் பெலராஸ் நாட்டிலேயே இருக்கிறார் எனத் தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் இப்போது ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு திரும்பியுள்ளார். அதேபோல கலகத்திற்கு முன்பு அவரது ராணுவத்தினர் எங்கே இருந்தனரோ, அதே இடங்களுக்கு இப்போது திரும்பியுள்ளனர்.

ரஷ்யா திரும்பினார்: முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் தனக்கும் தனது வீரர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம், தனது படைகளை பெலாரஸ் நாட்டிற்கு அழைத்து வர அனுமதி ஆகியவற்றை பெற்ற பிறகே ப்ரிகோஜின் தனது கலகத்தை முடித்துக் கொண்டார். கடந்த ஒரு வாரமாக பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிலேயே இருந்தார். இந்தச் சூழலில் தான் இப்போது பிரிகோஜின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் திரும்பியுள்ளார்.
அதேபோல வாக்னர் படை வீரர்களும் போருக்கு முன்பு எந்த முகாம்களில் இருந்தார்களோ அதே இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். அதேநேரம் எந்த இடத்தில் உள்ளனர் என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
என்ன நடந்தது: இதே வாக்னர் படை தான் கிளர்ச்சிக்கு முன் உக்ரைனில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டனர். இருப்பினும் திடீரென ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் தலைவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய வாக்னர் குழு, கலகம் செய்தனர். அப்போது அவர்கள் தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவை வெகு விரைவாகக் கைப்பற்றினர்..
மேலும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி பேரணியாகவும் சென்றனர். அந்த நேரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் புதினுக்கு எதிராக இந்தளவுக்கு வெளிப்படையாக அச்சுறுத்தலாக இருந்தவர் இவர் தான். இது புதின் தனது சொந்த நாடான ரஷ்யாவிலேயே எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறார் என்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்போது அங்கே கலகம் முடிவுக்கு வந்தாலும் கூட, மீண்டும் ரஷ்யாவில் பழையபடி சூழல் திரும்புவது கடினம் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது புதினுக்கு அங்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications