பெலாரஸ் அதிபர் தலையீட்டால் நடந்த ட்விஸ்ட்.. ரஷ்யாவை விட்டு வெளியேறும் வாக்னர் குழு தலைவர்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டு கடந்த் நீடித்துக் கொண்டு இருக்கிறது. சிறிய நாடான உக்ரைனை ஒரு கை பார்த்துவிடலாம் என்ற மமதையில் சென்ற ரஷ்யாவுக்கு நினைத்தது ஒன்று நடப்பது வேறு ஒன்று ஆகிவிட்டது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வலுவாக சண்டையிட்டது. இதனால், ரஷ்யாவின் எண்ணம் தற்போது வரை ஈடேறவில்லை. இதற்கு மத்தியில் ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான போரில் வாக்னர் என்ற தனியார் குழுவையும் போரில் பயன்படுத்தி வந்தது. இந்த குழுவை பொறுத்தவரை இது கூலிப்படை போல பணத்தை பெற்றுக்கொண்டு தாக்குதல் நடத்தும் ஒரு அமைப்பு ஆகும்.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாக தாக்குதல் நடத்தி வந்த இந்த குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. உக்ரைன் போரில் ரஷியா தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், தங்களது அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரை ரஷிய ராணுவம் கொன்றுள்ளதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டி கலகத்தை தொடங்கியது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்குவை வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் கடுமையாக விமர்சித்து வந்தார்.
தொடர்ந்து ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்றுவோம் என்ற அரைகூவலுடன் மாஸ்கோ நோக்கி செல்லவும் திட்டமிட்டது. எனினும்ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்ட வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் வெளியிட்ட ஒரு ஆடியோ செய்தியில், இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் தங்கள் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளின்படி, வாக்னர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு எதிரான ரஷ்ய பாதுகாப்புத்துறை பதிவு செய்த கிரிமினல் வழக்குகள் அனைத்தும், அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவின் பேரில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வாக்னர் படையினர் உடனான ஒப்பந்தப்படி ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் உட்பட பாதுகாப்பு அமைச்சகத்தில் பலரை மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் செல்வார் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications