ரஷ்யாவுக்கு எதிரான ஆயுத நடவடிக்கையை கைவிடும் வாக்னர்.. பெலாரஸ் அதிபர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படை அணிவகுப்ப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வாக்னர் குழுவின் முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்ய அதிபர் சார்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில், வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர்: ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவான. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக அச்சுறுத்தல் நடவடிக்கை வாக்னர் படை தொடங்கியதால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஷ்யா அரசுக்கு எதிராக வாக்னர் குழுவினர் திரும்பியுள்ளனர். ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம் என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்தார்.
பதற்றம்: வாக்னர் குழுவினரின் எழுச்சியால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்னர் குழுவினர் மாஸ்கோ நகரை நோக்கி நெருங்கி வந்தனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய கேட்டுக் கொள்கிறேன்" என எச்சரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்தை: புதினின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத வாக்னர் படை தொடர்ந்து முன்னேறி வந்தது. இதற்கிடையே, அண்டை நாடுகளின் உதவியை புதின் நாடியுள்ளார். இதைத்தொடர்ந்து பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், வாக்னர் படை, ரஷ்ய ராணுவத்துடனான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாக்னர் படை உடனான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது குறித்து பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உடன்பாடு எட்டப்பட்டது: பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதுன், தனியார் இராணுவ நிறுவனமான வாக்னருடன் தெற்கு ரஷ்யாவின் நிலைமை குறித்து எங்களது பெலாரஸ் பிரதிநிதிக்கு விளக்கினார். அனைவரும் இந்த கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்யாயாவின் அதிபர் சார்பில் வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். நாள் முழுவதும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யாவில் படுகொலைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று எவ்ஜெனி பிரிகோஜினிடம் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவில் வாக்னர் படையின் ஆயுதம் ஏந்திய வீரர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பதட்டங்களை தணிக்க நடவடிக்கை எடுக்கவும், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ விடுத்த கோரிக்கையை, வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ஏற்றுக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தனது போராளிகளுக்கு "பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு" ஈடாக தனது கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், வாக்னரின் ஆயுதமேந்திய படையினரின் நடமாட்டத்தை நிறுத்தவும், பதற்றத்தைத் தணிக்க மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications