அமெரிக்காவில் இந்தியர் கொலை: ஹெச்-1பி விசாவை மனதில் வைத்து அடக்கி வாசிக்கும் மோடி அரசு?
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் கொல்லப்பட்ட விஷயத்தில் இந்தியா அடக்கி வாசிக்கி காரணம் உள்ளதாம்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய என்ஜினியர் சீனிவாச குச்சிபோத்லா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பில் இருந்து கண்டன நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
உலகையே அதிர்ச்சி அடைய வைத்த இந்த விஷயத்தில் இந்தியா அடக்கி வாசிக்கிறது.

டிரம்ப்
அமெரிக்க அதிரபர் டிரம்பின் வெறுப்பு பேச்சுகளால் தான் கன்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று பல நடப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். கன்சாஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கண்டனம்
அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பேசிய டிரம்ப் சீனிவாச குச்சிபோத்லாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தார். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தியா
வெளிநாடுகளில் இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டால் இந்தியா வழக்கமாக கடும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் சீனிவாச குச்சிபோத்லா விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது.

விசா
இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் வேலைகளை அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் அறிவித்தார். மேலும் ஹெச்-1 பி விசா விஷயத்திலும் கை வைத்தார். ஹெச்-1பி விசாக்களில் 60 சதவீதம் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பால் 150 பில்லியன் டாலர் துறை பிரச்சனையில் சிக்கியுள்ளது.

மத்திய அரசு
ஹெச்-1பி விசா விஷயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரை மத்திய அரசு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் என்ஜினியர் கொலை விஷயத்தில் சீறினால் அமெரிக்கா விசா விவகாரத்தில் வேலையை காட்டிவிடும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

நடவடிக்கை
சீனிவாச குச்சிபோத்லா விவகாரத்தில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளது. நமக்கு தேவை குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பது தானே என்று கூறி இந்தியா தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications