அசைவே இல்லை.. சத்தமும் இல்லை.. அறிகுறியும் இல்லை.. பாத்ரூமில் நடந்த ஆச்சரியம்.. இதெல்லாம் நம்பலாமா?
விமான கழிப்பறையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை தந்துவருகிறது
ஆம்ஸ்டர்டாம்: ஒரு அறிகுறியும் தெரியவில்லையாம்.. ஆச்சரியத்திலும், வியப்பிலும், குழப்பத்திலும் ஒரு பெண் உறைந்து போயுள்ளார்.. என்ன நடந்தது?
நெஞ்சை தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் இணையவாசிகளை ஆச்சரிப்படுத்திவிடும்.
அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் உலக மக்களையே உறைய வைத்தது.. டொமினிக்கன் குடியரசில் மார்கரிட்டா ரொசாரியா என்ற பாட்டி வாழ்ந்து வந்தார்..

கல்லறை ஷாக்
இவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அப்போது பாட்டிக்கு 86 வயது.. இவரை கொண்டு போய் குடும்பத்தினர் கல்லறையில் நல்லடக்கம் செய்து வந்துவிட்டனர்.. இப்போது, மார்கரிட்டாவின் சடலத்தை தோண்டி எடுத்து, வேறொரு இடத்தில் புதைக்க, குடும்பத்தினர் யோசனை செய்தனர்.. அதற்காக 10 வருடம் முன்பு புதைக்கப்பட்ட மார்கரிட்டா கல்லறைக்கு போனார்கள்.. பாட்டியின் சடலத்தையும் குடும்பத்தினர்கள் தோண்டி எடுத்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தோல்நிறம்
மார்கரிட்டா உடல் புதைக்கப்பட்டு 10 வருடங்கள் ஆன பிறகும், அவரது தலைமுடி கொட்டாமல் அப்படியே இருந்ததாம்.. அவரது தோலின் நிறமும், வடிவமும் அப்படியே இருக்கிறதாம்.. கொஞ்சம்கூட பாதிப்பு கிடையாது. பாட்டி புதைக்கப்படும்போது எந்த உருவத்தில் இருந்தாரோ, இப்போதும் அச்சுஅசல் அப்படியேதான் இருக்கிறார் என்கிறார்கள்.. இதைவிட இன்னொரு அதிர்ச்சி, மார்கரிட்டாவின் உடலை நேராக நிற்க வைக்க குடும்பத்தினரால் முடிந்ததாம்.. சடலத்தை அப்படி நிற்க வைக்க முடியாது.. இதையெல்லாம் குடும்பத்தினரே ஆச்சரியப்பட்டு சொல்கிறார்கள்.

மனிதாபிமானி
"மார்கரிட்டா உயிருடன் இருக்கும்போதே, நிறைய தான தர்மங்களை செய்து வந்தார்.. ஊருக்கெல்லாம் கேட்காமலேயே உதவினார்.. எல்லார் மத்தியிலும் நல்லவர் என்ற பெயரை எடுத்தவர்.. சிறந்த மனிதாபிமானி என்று எல்லாருமே அவரை சாகும்வரை போற்றினார்கள்.. இப்படியான நற்குணம் கொண்டவராக வாழ்ந்துவந்ததால்தான், அவரது உடல் சேதமடையாமல் இருக்கிறது போலும் என்று குடும்பத்தினர் வியந்து சொன்னாலும், இயற்கைக்கு மாறாக இப்படியெல்லாம் நடக்குமா? என்ற வியப்பும் மேலிட்டு வருகிறது.. இதோ இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. இது அதிசயம் என்று சொல்ல முடியாது, ஆனால், ஆச்சரியம் என்றே சொல்லலாம்.

வயிறுவலி
ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது... அதில் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.. அந்த வகையில், தமாரா என்ற பெண்ணும் பயணம் செய்தார்.. இந்தநிலையில் விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரை நெருங்கி கொண்டிருந்தது.. அப்போது திடீரென தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது... வலியில் அவர் அலறி துடித்தார்... இதனால், பயணிகளும், விமான பணிப்பெண்களும் பதறிப்போய்விட்டனர்.. நேரம் ஆக ஆக வயிறு வலி மட்டும் அதிகமாக இருந்தது..

பாத்ரூமுக்குள்
பிறகு, தமாராவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மாக்சிமிலியானா என்ற பெண், தமாராவை விமான பாத்ரூமுக்குள் அழைத்து சென்றார். அப்போதுதான் தெரிந்தது, அதேவிமானத்தில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 டாக்டர்களும், ஒரு நர்சும் பயணம் செய்துள்ளனர்.. அவர்களும் தமாராவை செக் செய்ய, பாத்ரூமுக்குள் ஓடினார்கள்.. வயிற்றுப்பகுதியை டாக்டர்கள் தடவி பார்த்தனர்.. ஒன்னும் பிடிபடவில்லை.. தமாராவுக்கோ வயிறு வலி அதிகமாகி கொண்டே போனது.. திடீரென தமாராவுக்கு குழந்தை பிறந்துவிட்டது.. அழகான பெண் குழந்தை பிறந்ததை பார்த்து, டாக்டர்கள் மட்டுமல்ல, தமாராவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது..

தமாரா
காரணம், தான் கர்ப்பமாக இருப்பதே தமாராவுக்கே தெரியாதாம்.. வயிற்றுக்குள் வலி இருந்ததே தவிர, குழந்தை இருப்பதற்கான அறிகுறியோ, சத்தமோ, அசைவோ, எதுவுமே இல்லையாம்.. குழந்தையை பார்த்ததும் டாக்டர்களும், பயணிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தாலும், தமாரா மட்டும் பேயறைந்தது போல் இருந்தார்.. விமானம் ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்ட்டில் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

தாய் - சேய்
தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் சொன்னாலும், தமாரா மட்டும் குழப்பத்தில் இருந்து மீளவேயில்லையாம்.. ஆனால், தனக்கு வலி என்றதும், பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த சக பயணியான மாக்சிமிலியானா என்பவர்தான், கடைசிவரை கூடவே இருந்து, பிரசவத்துக்கு உதவி செய்துள்ளார்.. முன்பின் தெரியாத அந்த பெண்ணின் உதவியை கண்டு நெகிழ்ந்து போன தமாரா, தனக்கு பிறந்த அந்த குழந்தைக்கு மாக்சிமிலியானா என்று நன்றியுடன் பெயரை சூட்டியிருக்கிறாராம்..!!












Click it and Unblock the Notifications