For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது என்ன ஜெயிலா இல்ல Party Club-ஆ.... குத்தாட்டம் போட்ட பெண்கள்... எங்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Google Oneindia Tamil News

பிரேசிலியா: கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறை கைதிகளை மகிழ்விக்கப் பெண் டான்சர்களை கொண்டு உல்லாச நடன நிகழ்ச்சி சிறையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது.

பிரேசில் நாட்டில் சிறை கைதிகள் அங்குள்ள அதிகாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் அங்குள்ள ஒரு சிறையில் கைதிகளை மகிழ்விக்க அவர்களிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு அந்நாட்டு போலீசார் செய்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை செல் சாவியை ஏலம் விட முயற்சி: தென்னாப்பிரிக்கா எதிர்ப்புநெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை செல் சாவியை ஏலம் விட முயற்சி: தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு

பிரேசில்

பிரேசில்

அதாவது பிரேசில் நாட்டில் உள்ள பெர்னாம்புகோவில் அமைந்துள்ள சிறையில் கைதிகளை மகிழ்விக்கப் பெண் டான்சர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சிறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று இதற்காக சிறைத்துறை அதிகாரிகள் 2 டான்சர்களை சிறைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது இது தொடர்பான 17 நொடிகள் ஓடும் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

பிரேசிலின் பெர்னாம்புகோவில் உள்ள கோயானாவின் சிறைச்சாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பார்ட்டியில் தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. சுமார் 17 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், சிறைக்குள் இரண்டு பெண் டான்சர்களை கொண்டு பார்ட்டி நடத்தியுள்ளனர். அவர்கள் சிறை கைதிகளை உற்சாகப்படுத்தும் வகையில் டான்ஸ் ஆடுகின்றனர். இந்த வீடியோவ அங்கிருக்கும் கைதிகளில் ஒருவர் தான் எடுத்துள்ளார். அந்த கைதி வெளியே இருக்கும் ஒருவரிடம் இந்த வீடியோவை அனுப்பியுள்ளார். அதன் பின்னரே இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

எதிர்க்கட்சிகள்

இந்தச் சம்பவத்திற்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரேசில் சிறைத் துறையில் எந்தளவுக்கு ஊழல் உள்ளது என்பதையே இது காட்டுவதாக உள்ளதாகச் சாடியுள்ளனர். இது குறித்து அந்நாட்டின் எம்பி கார்லோஸ் ஜோர்டி தனது ட்விட்டரில், "பெண் டான்சர்கள் மற்றும் இசையுடன் பார்டி நடக்கிறது. இது எங்கோ நடக்கும் பார்ட்டி இல்லை. பெர்னாம்புகோவில் உள்ள சிறையில் நடக்கும் பார்ட்டி. இந்த வீடியோவை எடுத்ததும் ஒரு கைதி தான். இது தான் நமது தண்டனை முறை" என்று சாடியுள்ளார்.

விசாரணை

விசாரணை

இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கைதிகளுக்குச் சலுகைகளை வழங்கி உதவிய சிறை ஊழியர் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், மேலும் சம்பந்தப்பட்ட மூன்று கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கைதிகளே அந்த ஊழியரின் உதவியுடன் இந்த டான்சர்களை கூட்டி வந்துள்ளனர். அந்த சிறையில் மொத்தம் 105 கைதிகள் இருந்ததாகவும் ஆனால் அதில் எத்தனை பேர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர் எனத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Female dancers entertaining male prisoners inside Brazil jail went viral on social media. The 17-second footage is from a Christmas eve party held at the Public Prison of Goiana in Brazil’s Pernambuco
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X