பாகிஸ்தானுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா.. நேரில் சென்று அதிருப்தியை வெளிப்படுத்திய சசிதரூர்
பகோட்டா: இந்தியாவின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானில் பலியானவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது. இதையடுத்து கொலம்பியாவுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் எம்பி சசிதரூர் அதிருப்தியை வெளிப்படுத்தி பாடமெடுத்தார்.
நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் பொய் பிரசாரங்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை தோலுரித்து காட்டவும், நம் நட்பு நாடுகளுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துக்கூறவும் வெளிநாடுகளுக்கு 7 எம்பிக்கள் குழுக்கள் சென்றுள்ளன.

இந்த குழுவினர் தங்களுக்கு என்று வழங்கப்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் கொடுக்கும் ஆதரவு பற்றியும், அதற்கு இந்தியா எடுத்த நடவடிக்கை பற்றியும் விவரித்து வருகின்றனர்.
இதில் ஒரு குழுவை காங்கிரஸ் எம்பி சசிதரூர் வழிநடத்துகிறார். இந்த குழுவில் சசிதரூர் தலைமையிலான எம்பிக்கள் குழுவில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சர்ப்ராஸ் அஹமது தெலுங்கு தேசம் கட்சியின் ஜிஎம் ஹரிஷ் பாலயோகி, பாஜகவை சேர்ந்த ஷஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, தேஜஸ்வின சூர்யா, சிவசேனாவின் மிலிண்ட் தியோரா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்
சசிதரூர் தலைமையிலான குழுவினர் பனாமா, கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு நேற்று சென்றனர். கொலம்பியாவில் உள்ள பகோடாவில் அமைந்து இருக்கும் நம் நாட்டின் தூதரகத்தில் அவர் தங்கினர். அப்போது கொலம்பியாவை சசிதரூர் கடுமையாக கண்டித்தார். இதுதொடர்பாக சசிதரூர் கூறியதாவது:
‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த இரங்கல் என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி உள்ளது.
நாங்கள் எங்கள் தற்காப்பு உரிமையை மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த சூழல் பற்றி கொலம்பியாவுடன் விரிவாக பேசுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கொலம்பியா பல பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தித்தது போலவே நாங்களும் இந்தியாவில் இருக்கிறோம். கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications