Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி எங்களை பாகிஸ்தானியர்கள் என சொல்லாதீங்க! விடுதலையை அறிவித்த பலூச் மக்கள் இந்தியாவுக்கு டிமாண்ட்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ‛‛இனி எங்களை பாகிஸ்தானியர்கள் என்று சொல்லாதீங்க.. நாங்கள் பலூசிஸ்தானியர்கள். நாங்கள் பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக சுதந்திரம் பெற்றுவிட்டோம். எங்களை அங்கீகரிக்க இந்தியா உள்பட சர்வதேச சமூகங்கள் உதவ வேண்டும்'' என்று பாகிஸ்தானின் பலூச் தலைவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இது கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். பாகிஸ்தானும், சீனாவும் சேர்ந்து இங்கிருந்து கனிம வளங்களை கொள்ளையடிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையில் உள்ளதால் பலுசிஸ்தான் மக்களை பாகிஸ்தான் அரசு கண்டுக்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக உள்ளது.

pakistan balochistan bla

இந்நிலையில் தான் பலுசிஸ்தான் மக்கள் தனி நாடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் சமீபத்தில் வலுத்தது. பலூச் விடுதலை ராணுவம் என்ற போராளி குழு பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து மோதியது. அதேபோல் இன்னும் பல போராளி குழுக்களும் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து களமிறங்கியது.

இந்த போராளி குழுவினர் பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை கைப்பற்றினர். பலுசிஸ்தான் தலைநகராக உள்ள குவாட்டாவை கடந்த 8 ம் தேதி கைப்பற்றினர். அதன்பிறகு பலசிஸ்தான் விடுதலையை அறிவித்தனர். தற்போது நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதி வரும் நிலையில் பலசிஸ்தானை அந்த நாடு இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் பலூச் போராட்டக்குழுவை சேர்ந்தவரும், எழுத்தாளருமான மிர் யார் என்பவர் இந்தியாவுக்கு மிகப்பெரிய கோரிக்கையை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்கான தேச விடுதலைக்கான தீர்ப்பை பெற்றுள்ளனர். இந்த விஷயத்தில் உலகம் அதிக நாட்கள் அமைதியாக இருக்க முடியாது. பலூச் மக்களின் கொள்கை என்பது நாங்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்பது தான். இதனால் இனி எங்களை யாரும் பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம். பலுசிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டும்.

டியர் இந்தியன் மீடியா நண்பர்கள். யூடியூப் காம்ரேட்டுகள், இந்தியாவை பாதுகாக்க போராடும் இன்டலெக்சூவல் அனைவரும் எங்களை பலூச் மக்கள் என்றே குறிப்பிட வேண்டும். பாகிஸ்தானியர்கள் என்று எங்களை அழைக்காதீர்கள். பாகிஸ்தான் மக்கள் என்பவர்கள் குண்டு வீச்சை பார்க்காமல், இனப்படுகொலையை சந்திக்காமல் அமைதியாக பஞ்சாப்பில்(பாகிஸ்தான் பஞ்சாப்) வாழ்பவர்கள் தான்'' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பலூச் மக்கள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+