தாலிபன்கள் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு.. இதற்கு எப்போதுமே இனி அனுமதிக்க மாட்டோம்.. அளித்த உறுதி
காபூல் : உலகின் எந்த நாட்டிற்கும் எதிராக எங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அண்டை நாடுகளுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம் என்று ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் தெரிவித்தனர். கல்வி கற்க மற்றும் வேலைக்கு செல்ல பெண்களை அனுமதிப்போம் என்றும் உறுதி அளித்தனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ஆதரவு அரசு படைகளுக்கும், அங்கு 2001க்கு முன்பு ஆட்சியில் இருந்த தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தாலிபன்கள் உறுதி
தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், உலகின் எந்த நாட்டிற்கும் எதிராக எங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அண்டை நாடுகளுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். எங்கள் மண்ணிலிருந்து உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம் , இதை உலக சமூகம் நம்ப வேண்டும்

வெளிநாடுகளுக்கு உறுதி
காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், பணிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் படைகள் உள்ளன என்று அனைத்து வெளிநாடுகளுக்கும் நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம் என்றார்.

அனைவருக்குமான அரசு
1990 களின் தலிபான் மற்றும் இன்றைய வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜபிஹுல்லா முஜாஹித் , சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள் ஒரே மாதிரியானவை, ஏனெனில் நாங்கள முஸ்லிம்கள், ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு மாற்றம் உள்ளது-அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். நாங்கள் அனுபம் பெற்றவர்கள் வேறு கண்ணோட்டத்தில் அணுகுவோம். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை நாங்கள் நிறுவ விரும்புகிறோம்" என்றார்.

ஊடக சுந்திரரம்
இதனிடையே கல்வி கற்க வேலைக்கு செல்ல பெண்களை அனுமதிப்போம் என்று உறுதி அளித்துள்ள தாலிபன்கள், இஸ்லாமிய சட்டப்படி கட்டுப்பாடுகளை செயல்படுத்துவோம் என்றார்கள். மேலும் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம் என்று கூறிய அவர்கள், ஊடகத்தினர் வழக்கம் போல் பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்கள். மேலும் அரசு ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.












Click it and Unblock the Notifications