டெல்லியில் பாகிஸ்தான் கொடி பறக்கும்.. கராச்சியில் இருந்து மோடிக்கு வந்த பகீர் மிரட்டல்.. யாரு அது?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: டெல்லியில் காலை உணவு சாப்பிட்டு அங்கு எங்களின் கொடியை ஏற்ற விரும்புகிறோம். இஸ்ரேலின் ட்ரோன், பிரான்சின் ரபேல் போர் விமானங்கள், ரஷ்யாவின் எஸ் 400 ஏவகணை தடுப்பு சிஸ்டமை அழித்து இருக்கிறோம். இதனால் பாகிஸ்தானுடன் மோதும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என்று கராச்சியில் மத அடிப்படைவாதிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி நாம் அழித்தோம்.

pakistan india

பதிலுக்கு பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுத்த நம் நாடு பாகிஸ்தானின் 3 விமானப்படை தளத்தை அழித்தது. பதற்றம் உச்சமடைந்த நிலையில் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. மனிதாபிமான அடிப்படையில் நம் நாடும் போரை நிறுத்துவதாக அறிவித்தது. பாகிஸ்தான் அதிகாரி நேரடியாக நம் நாட்டின் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதால் இந்த போர் நிறுத்தத்தில் வெற்றி கிடைத்தது.

இந்நிலையில் தான் பயங்கரவாதிகளை ஆதரித்து வரும் திஃபா இ-வதன் கவுன்சில் சார்பில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கராச்சியில் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு மதகுருக்கள் பங்கேற்றனர். இவர்கள் சர்ச்சைக்குரிய வகையிலும் இந்தியாவை எதிர்க்கும் வகையிலும் கருத்துகளை தெரிவித்து பரபரப்பை கிளப்பினர். இதில் முஃப்தி தாரிக் மசூத் என்பவர் பேசும்போது கூறியதாவது:

நமது எதிரி (இந்தியா) நமது இராணுவத்தை மதம் சார்ந்து செயல்படுகிறது என்றும், துரோகம் செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். இந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, நமது ராணுவம் மதம்சார்பற்றது அல்ல என்று உறுதியாக நம்பினோம். இது தியாகத்தின் மீது ஆர்வம் கொண்ட மதம் மற்றும் இஸ்லாமின் பெயர், அல்லாவின் பெயரால் உயிர் தியாகம் செய்யும் ராணுவம் என்று அறிந்துள்ளோம்'' என்றார். அதாவது பாகிஸ்தான் ராணுவம் மதசார்பற்றது அல்ல. அது மத அடிப்படையில் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (சிந்து) பொதுச் செயலாளர் அல்லமா ரஷீத் மஹ்மூத் சூம்ரோ பேசும்போது நம் நாட்டையும், பிரதமர் மோடியையும் நேரடியாக மிரட்டினார். இதுதொடர்பாக அவர், "எனது தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் மோடிக்கு சவால் விடுத்தார். நாங்கள் இந்தியாவில் காலை உணவை சாப்பிட விரும்புகிறோம். டெல்லியில் பாகிஸ்தான் கொடி ஏற்ற விரும்புகிறோம் என்று கூறினார். இதுவே எங்களின் நிலைப்பாடு.

பாகிஸ்தான் படைகள் இஸ்ரேல் நாட்டின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி அந்த நாட்டின் பெருமையை அழித்துவிட்டன. ரஃபேல் ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவின் (பிரான்ஸ், ரஷ்யாவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) ரத்தத்தை அழித்தோம். இனி பாகிஸ்தானுடன் மோதுவதற்கு முன்பு 100 முறை யோசிக்க வேண்டும்'' என்று வாய்ச்சவடால் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து நம் நாடு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் மத அடிப்படைவாதிகள் தேவையின்றி நம் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அந்த நாட்டு அரசும், பாகிஸ்தான் ராணுவமும் கண்டிக்கவில்லை. இதனால் அவர்களின் பேச்சுக்கு அரசு, ராணுவம் ஆகியவை ஒப்புதல் வழங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+