முகமது யூனுஸ்க்கு ஆப்பு? வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவம்? ராணுவ தலைமை தளபதி சொன்ன மேட்டர்
டாக்கா: வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபடும் என்று அந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் சொன்ன வார்த்தை தற்போது பேசும் பொருளாகி உள்ளது. அதோடு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு சிக்கல் வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது.

இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நம்முடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதோடு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் தற்போது வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொடக்கத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மாஜி பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி எனும் வங்கதேச தேசியவாத கட்சி தற்போது அதிருப்தியில் உள்ளது. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் உடனடியாக தேர்தலை நடத்துவார். இதன்மூலம் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் மீதான வெறுப்புகளை ஓட்டுகளாக பெற்று ஆட்சியில் அமர நினைத்தது. ஆனால் முகமது யூனுஸ் தேர்தலை நடத்துவது போல் தெரியவில்லை.
கலிதா ஜியாவின் கட்சி சார்பில் இந்த ஆண்டு மத்தியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் முகமது யூனுஸ் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலை நடத்தவும், அதுவரை தொடர்ந்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியில் நீடிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனால் முகமது யூனுஸ் மீது ஒரு தரப்புக்கு அதிருப்தி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்ற நிலை இருக்கிறது.
இப்படியான சூழலில் தான் தற்போது வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி அவர் பேசியுள்ளார். வங்கதேசத்தின் சாவர் கண்டோன்மெண்ட்டில் ராணுவ படைப்பிரிவுக்கு இடையே துப்பாக்கிச்சூடும் போட்டி நடந்தது. போட்டியின் முடிவில் வாக்கர் உஸ் ஜமான் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு அவர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‛‛வங்கதேச சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ராணுவத்தின் பங்களிப்பு என்பது மிகவிரைவில் முடிவுக்கு வரும் என்று
தொடக்கத்தில் நினைத்தோம். இதனால் விரைவில் ராணுவ வீரர்கள் கண்டோன்மென்ட் திரும்புவார்கள் என்று எண்ணினோம். ஆனால் தற்போதைய நிலை அதற்கு உகந்ததாக இல்லை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க இன்னும் நீண்டகாலம் ராணுவம் பணியாற்ற வேண்டி உள்ளது. இந்த பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் பொறுமையாகவும், தொழில் பக்தியுடனும் மேற்கொள்ள வேண்டும்.
எந்தவொரு பிரச்சனையும் இன்றி பணியாற்ற வேண்டும். பணியின்போது படைகளை பயன்படுத்தும் நிலைக்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாது. தேவையான நேரத்தில் மட்டுமே படைகளை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார். ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஜ் ஜமானின் இந்த பேச்சு என்பது வங்கதேசத்தில் இன்னும் கொந்தளிப்பு அடங்கவில்லை. சட்டம் - ஒழுங்கு சரியாகவில்லை. வன்முறையின்போதும் சரி, இப்போதும் சரி
அங்குள்ள இந்து உள்பட சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கமுறை நடந்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வெடித்து சட்டம் - ஒழுங்கிற்கு பிரச்சனை உருவாகலாம் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் மக்களால் தேர்வு செய்யப்படும் புதிய ஆட்சி அமைந்த பிறகு தான் பதவி விலகுவேன் என்று இடைக்கால அரசின்
தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இருக்கிறார். நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். ஆனால் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகியும் முகமது யூனுஸ் அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அப்படிப்பார்த்தால் நாட்டில் தேர்தல் நடத்துவது கேள்விக்குறியாக தான் உள்ளது.
இதனால் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர ராணுவ தலைமை தளபதி முகமது யூனுஸ் தொடர்ந்து படை வீரர்கள் செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார். இதன்மூலம் நாடு முழுவதும் சட்டம் -ஒழுங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் வரும் காலத்திலும் இருக்கும்.
இது ராணுவத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாகும். நாட்டு எல்லையில் மட்டுமின்றி நாட்டுக்குள்ளேயும் ராணுவத்தின் செயல்பாடு ஆக்டிவ்வாக இருக்கும். அதுமட்டுமின்றி தற்போதைய ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர். இதனால் அவர் மீது முகமது
யூனுஸ்க்கு அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்ததே வாக்கர் உஸ் ஜமான் தான். இதனால் அவரை ராணுவ தலைமை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு இன்னொருவரை அந்த பொறுப்பில் நியமிக்கவும் இடைக்கால அரசிடம் திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இப்படியான சூழலில் தான் நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் இனியும் தொடர்ந்து ராணுவம் செயல்படும் என்று வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் முகமது யூனுஸ் மீது நிலவும் அதிருப்தி, அதனால் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில் ஆட்சியை வாக்கர் உஸ் ஜமானின் ராணுவம் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications