For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.: திருமண விழாவில் பட்டாசு வெடித்த மணமகன்கள் 2 பேர் கைது

By Siva
Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தானில் திருமணத்தன்று பட்டாசுகள் வெடித்ததற்காக மணமகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சகோதரர்கள் இருவருக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பலரக பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன.

இதைடுத்து அங்கு வந்த போலீசார் மணமகன்கள் மற்றும் 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Wedding was a blast: Pak grooms face terror charges over fireworks

இது குறித்து போலீஸ் அதிகாரி அப்பாஸ் கொலார்ச்சி கூறுகையில்,

திருமண விழாவில் மிகவும் சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. அதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பீதியடைந்துள்ளனர். அந்த 5 பேர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு பல ஆண்டு சிறை தண்டனையும் ஏன் மரண தண்டனை கூட கிடைக்கலாம் என்றார்.

பாகிஸ்தான் போலீசார் தீவிரவாத தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
Pakistan police arrested two grooms and three others for blasting crackers on the day of wedding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X