இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்! இந்தியாதான் பலி ஆடு! WEF வார்னிங்
டாவோஸ்: உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நேற்று நடந்திருக்கிறது. இதில், இனி வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
பெரும் பணக்காரர்கள், பில்லியனர்கள் உலக பொருளாதார மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த மன்றத்தின் ஆண்டு கூட்டம் நேற்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இனி வரும் நாட்களில் எப்படியெல்லாம் லாபம் சம்பாதிக்கலாம் என பணக்காரர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், இந்த மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. இது பணக்காரர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

WEF அறிக்கை:
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமன் (Oliver Wyman) உடன் சேர்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், உலகம் முன்னெப்போதைவிடவும் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு எனில் ரூ.51 லட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 லட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம். உலக நாடுகளின் GDP-ல் இந்த பணம் 5% ஆகும்.
பொருளாதார பாதிப்புகள் ஏன்?:
உலக நாடுகள் மத்தியில் இருக்கும் பிரிவினைகள், தன்னிச்சையாக செயல்படுதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படும் என்று WEF கணித்திருக்கிறது. இதனை 'geoeconomic fragmentation' என்றும் குறிப்பிட்டிருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில், டிரம்ப் வந்தவுடன் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இன்ன பிற நாடுகளுக்கும் 'இந்தா புடிச்சிக்கோ' என பொருளாதார தடைகளை வீசி எறிந்திருக்கிறார். பதிலுக்கு இந்த நாடுகளும் அமெரிக்க பொருட்கள் மீதான தடையை அறிவித்து வருகின்றன. இப்படி செய்வதுதால் புவிசார் அரசியலில் பிளவு ஏற்படும். உலக அளவில் விநியோக சங்கிலியில் உடைப்பு ஏற்படும். வர்த்தக போரும் உருவாகும் இதைத்தான் geoeconomic fragmentation என்று சொல்கிறார்கள்.
எந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்கும்?:
WEF அறிக்கையில், இனி வரும் நாட்களில் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2008 பொருளாதார வீழ்ச்சியை விடவும், கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இதனால் பாதிப்புகள் இருந்தாலும் அந்த நாடுகள் இதனை சமாளித்துக்கொள்ளும். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் இதை தாங்கிக்கொள்ள முடியாது.
இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு?:
இந்தியா மட்டுமல்லாது பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த நாடுகளில் GDP 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போக வாய்ப்பு இருக்கிறது. இவையெல்லாம் அணிசேரா நாடுகளாக இருக்கிறது. அதாவது ரஷ்யாவிடமும் உதவியை வாங்கிக்கொள்ளும், அமெரிக்காவிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். ஆனால் பஞ்சாயத்து என்று வந்துவிட்டால் எந்த பக்கமும் நிற்காது.
ஆனால் எதிர்காலத்தில் வரும் பொருளாதார தாக்கங்கள், அணிசேரா நாடுகள் என்கிற ஒரு கூட்டமைப்பையே இல்லாமல் காலி செய்துவிடும். அதாவது இந்த நாடுகள் நிச்சயம் எதாவது ஒரு பெரிய நாட்டின் பக்கம் சார்ந்தே ஆகவேண்டும் என்கிற நிலை உருவாகிவிடும். ஆக இவ்வளவு பிரச்சனைகள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு காத்திருக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications