கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
கைக்குழந்தைக்கு கூட தனியாக டிக்கெட் எடுக்க சொன்னதால், பெல்ஜியம் தம்பதி விபரீத முடிவை எடுத்தனர்.
பிரஸ்ஸல்ஸ்: கைக்குழந்தைக்கு விமான ஊழியர்கள் தனி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியதால் அந்தத் தம்பதி செய்த காரியம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா செல்ல அனைவருமே பல காலம் பிளான் போட்டே செல்வார்கள். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பதால், அதற்குள் அனைத்து சுற்றுலா தளங்களையும் என்ஜாய் செய்ய வேண்டும் என பிளான் போடுவார்கள்
அதேநேரம் பலருக்கும் சுற்றுலா செல்வதே அழுத்தத்தையும் கூட தரும். பிளான் செய்தது போல அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதே இவர்களுக்கு இப்படி அழுத்தத்தைத் தருகிறது.

அழுத்தம்
டிரிப் செல்ல பிளான் போட்டு வந்து, சண்டை போட்டு கொள்ளும் பல ஜோடிகளை ஏர்போர்ட்டுகளில் பார்க்கலாம். இந்த பயண டென்ஷனில் பல நேரங்களில் வழக்கத்திற்கு மாறாகப் பலரும் நடந்து கொள்வார்கள். விமானங்களில் பயணிகள் ரகளை என நாம் பல செய்திகளைப் பார்த்திருப்போம். அதற்கு முக்கிய காரணமே இந்த அழுத்தம்தான். அப்படியொரு சம்பவம் தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த தம்பதி அடுத்த லெவலுக்கே சென்றுவிட்டனர்.

பரபர சம்பவம்
பொதுவாக விமான நிறுவனங்களும் பயணிகளிடம் இருந்த அதிகபட்ச பணத்தைப் பிடுங்கவே முயல்கிறது. இதுவும் விமான குழு மற்றும் பயணிகள் மோதலுக்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அப்படித்தான் அதிகப் பணம் கேட்டதற்காக ஒரு தம்பதி விபரீத முடிவை எடுத்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் கைக்குழந்தைக்குத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்று ரயன்ஏர் விமான ஊழியர்கள் கேட்டதால் அந்த தம்பதி குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனி டிக்கெட்
விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், அந்த தம்பதி தங்கள் குழந்தையை செக்-இன் கவுண்டரில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். கைக்குழந்தைக்கு விமானத்தில் தனி டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரயன்ஏர் ஊழியர்கள் சொன்னதால் அந்த தம்பதி இப்படிச் செய்துள்ளதாக இஸ்ரேல் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தம்பதி பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதம்
அந்த தம்பதி தங்கள் குழந்தையையும் முதலில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் விமான நிலையத்திற்குத் தாமதமாகவே வந்துள்ளனர். கவுண்டருக்கு தாமதமாக வந்த அவர்களிடம் கைக்குழந்தைக்குத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்று அந்த விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், விமான ஊழியர்கள் நிச்சயம் டிக்கெட் எடுத்தாக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

ஷாக் சம்பவம்
அதன் பிறகு அந்த தம்பதி செய்த காரியம் தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணத்தைச் செலுத்தி டிக்கெட் வாங்குவதற்குப் பதிலாக அந்த ஜோடி அப்படியே குழந்தையை அங்குக் கவுண்டரில் விட்டுவிட்டு விமானத்தை நோக்கி ஓடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தம்பதியினரை நிறுத்தியுள்ளனர். பாதுகாப்பு சோதனையின் போது அவர்களை நிறுத்திய அதிகாரிகள், குழந்தையைப் பெற்றுச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி
கைக்குழந்தையை இப்படிப் பொறுப்பே இல்லாமல் விட்டுச் சென்ற அந்த ஜோடியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து ரயன்ஏர் அதிகாரி கூறுகையில், "இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை... எங்களால் எங்கள் கண்களையே நம்ப முடியவில்லை" என்றார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications