உக்ரைன் மீது போர்.. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை புறக்கணித்த சீனா
ஜெனீவா: உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் இறையாணமையை சீனா மதிப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் அணுகுண்டு தாக்குதல் மிகப் பெரிய தாக்குதலாகும். கடந்த வியாழக்கிழமை உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் ரஷ்யா தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். உக்ரைனில் மேற்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் குண்டு மழை பொழிவதால் மக்கள் அச்சமடைந்துளளார்கள்.

உக்ரைன் மீதான போர்
இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றைய தினம் தீர்மானம் கொண்டு வந்தன. மொத்தம் 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில் தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்தன.

3 நாடுகள் புறக்கணிப்பு
அது போல் தீர்மானத்தை இந்தியா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள் புறக்கணித்தன. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ பேசுகையில், எந்த ஒரு நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் சீனா மதிக்கிறது. இது உக்ரைனுக்கும் பொருந்தும்.

சீனா வாக்களிக்கவில்லை
அதே வேளையில் ஐரோப்பிய அதிகாரிகளிடம் நான் கூறிக் கொள்வது என்னவெனில், கிழக்கு நோக்கிய நேட்டோவின் விரிவாக்கம் குறித்து ரஷ்யாவின் கவலைகள் சரியாக தீர்க்கப்பட வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் பதற்றத்தை தணிக்க வேண்டும். பிரச்சினை மேலும் பெரிதாக எரியூட்டக் கூடாது.

சீனா விளக்கம்
விரைவில் ரஷ்யா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை சீனா வரவேற்கிறது. எனவே நாங்கள் இந்த தீர்மானத்தை புறக்கணிக்கிறோம் என்றார். அதாவது இந்த தீர்மானத்திற்கு எதிராகவோ ஆதரவாகவோ சீனா வாக்களிக்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை ரஷ்யாவின் செயல்பாடுகளிலிருந்து கருத்து தெரிவிக்க சீனா ஒதுங்கியே இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications