ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்த அமெரிக்கா.. நடந்தது என்ன?
ஜெனீவா: உக்ரைன் மீதான ரஷ்யா போரை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
Recommended Video
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
அல்பேனியா, பிரேசில், கபான், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இல்லை. இதில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 5 நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது.

வீட்டோ அதிகாரம்
இந்த வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர நாடுகள் அந்த கவுன்சிலின் தலைவர்களாகவும் செயல்படுகிறார்கள். இதனால் ஒரு நாட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு எதிராக இந்த 5 நாடுகள் வாக்களித்தால் அந்த தீர்மானத்தின் மீது மெஜாரிட்டி ஆதரவு இருந்தாலும் அது தோல்வி அடைந்துவிடும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
அந்த வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை ரஷ்யா பயன்படுத்தி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை முறியடித்துவிட்டது. அந்த வகையில் தீர்மானத்தின் மீது எந்தெந்த நாடுகள் என்ன பேசின என்பதை பார்ப்போம். இந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள் புறக்கணித்துவிட்டன.

இந்தியா புறக்கணிப்பு
இதில் ஐநாவுக்கான இந்திய தூதர் பேசுகையில், உக்ரைனில் நடைபெற்று பெரும் போர் குறித்து இந்தியா கவலை கொள்கிறது. வன்முறைகளை உடனடியாக நிறுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மனித உயிர்களை பணயமாக வைத்து எந்த தீர்வையும் எட்டி விட முடியாது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்கிறது என திருமூர்த்தி தெரிவித்தார்.

சீனா கருத்து
அது போல் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் கூறுகையில் எந்த ஒரு நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் சீனா மதிக்கிறது. இது உக்ரைனுக்கும் பொருந்தும். அதே வேளையில் ஐரோப்பிய அதிகாரிகளிடம் நான் கூறிக் கொள்வது என்னவெனில், கிழக்கு நோக்கிய நேட்டோவின் விரிவாக்கம் குறித்து ரஷ்யாவின் கவலைகள் சரியாக தீர்க்கப்பட வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் பதற்றத்தை தணிக்க வேண்டும். பிரச்சினை மேலும் பெரிதாக எரியூட்டக் கூடாது. எனவே இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறினார்.

அமெரிக்கா காட்டம்
வீட்டோவை பயன்படுத்தி ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது குறித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கூறுகையில், "ரஷ்யா நீங்கள் இந்த தீர்மானத்தை முறியடித்துவிட்டீர்கள். ஆனால் உங்களால் எங்கள் குரல்களை நெரிக்க முடியாது. உண்மையை ஒன்றும் இல்லாமல் ஆக்க முடியாது. எங்கள் கொள்கைகளை உங்களால் முறியடிக்க முடியாது. உக்ரைன் மக்களையும் உங்களால் தோற்கடிக்க முடியாது என்றார்.

பிரிட்டன் கூறியது என்ன?
அது போல் ஐநாவுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா வுட்வார்டு கூறுகையில் தவறு செய்யாதீர்கள். ரஷ்யா தனித்து விடப்பட்டுவிட்டது. உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு ரஷ்யாவுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்றார். அது போல் ஐநாவுக்கான பிரேசில் தூதர் ரொனால்டோ காஸ்டா ஃபில்ஹோ கூறுகையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் எங்களுக்கு கவலையை தருகிறது. ரஷ்யா எல்லை மீறி செல்கிறது. இதற்கு இந்த பாதுகாப்பு கவுன்சில் மவுனமாக இருக்கக் கூடாது என்றார்.

ரஷ்ய தூதர்
இதுகுறித்து ஐநாவுக்கான ரஷ்ய தூதர் கூறுகையில் கிழக்கு உக்ரைன் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். கிழக்கு உக்ரைனில் 8 ஆண்டுகளாக ரஷ்யா பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். உக்ரைன் குற்றச்சாட்டுகளை மேற்கு நாடுகள் புறக்கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications